புதுடெல்லி:
விங்க் கமாண்டர் அபிநந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கோரிக்கை வைத்தார்.
பாகிஸ்தானில் உள்ள பாலக்கோடு தீவிரவாத முகாமில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது.
மறுநாள் பிப்ரவரி 27-ம் தேதி இந்திய எல்லையில் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை, விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் மிக்-21 பிஸான் போர் விமானத்தில் விரட்டிச் சென்றார்.
அப்போது, பாகிஸ்தான் விமானப் படையினர் அவர் சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்தினர்.
இதில் அபிநந்தன் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
எனினும், அவர் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால், பாகிஸ்தான் ராணுவத்தினர் அவரைப் பிடித்துச் சென்றனர்.
இதனையடுத்து, இரு நாடுகளுக்கிடையே நட்புறவை மேம்படுத்தும் வகையில் அபிநந்தனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுவித்தார்.
அப்போது, அபிநந்தனின் மீசையும் பிரபலமானது.
இந்த மீசை விவகாரம் இன்று மக்களவையிலும் எதிரொலித்தது.
மக்களவையில் பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “விங்க் கமாண்டனர் அபிநந்தன் கவுரவிக்கப்பட வேண்டும்.
அவரது மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும்” என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.