லக்னோ: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது மேற்கிந்திய தீவுகள் அணி.
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, லக்னோவில் ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் மோதியது.
முதல் இன்னிங்ஸில் ஆப்கன் அணி 187 ரன்கள் அடிக்க, மேற்கிந்திய தீவுகள் அணி 277 ரன்கள் அடித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆப்கன் அணி வெறும் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 31 ரன்களை மட்டுமே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
யார் வேண்டுமானாலும் எட்டக்கூடிய ஒரு இலக்கை நோக்கி பயணித்த மேற்கிந்திய தீவுகள் அணி, 1 விக்கெட் இழந்து 33 ரன்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.