
ஆண்டிகுவா: மூன்றாவது ஒருநாள் தொடரையும் கைப்பற்றி, இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது விண்டீஸ் அணி.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களை எடுத்தது.
ஏற்கனவே, முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை வென்றிருந்த விண்டீஸ் அணி, இப்போட்டியையும் வென்றால் இலங்கையை ஒயிட்வாஷ் செய்யலாம் என்ற நிலையில் களமிறங்கியது.
இந்த அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான ஷாய் ஹோப் 64 ரன்கள் அடிக்க, டேரன் பிராவோ சதம்(102) ரன்கள் அடித்தார். கிரண் பொல்லார்டு 53 ரன்களை அடித்தார்.
இறுதியில், 48.3 ஓவர்களிலேயே, 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 276 ரன்கள் எடுத்து வெற்றிபெற்று, இலங்கையை ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் செய்தது விண்டீஸ் அணி.
[youtube-feed feed=1]