மும்பை: எஸ் பேங்க் சிக்கலை தீர்த்து, அதனை மீட்டெடுக்க, 10000 கோடி முதலீடு செய்ய எஸ்பிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறியுள்ளார்.
வாராக்கடன் விவகாரத்தில் இப்போது சிக்கி தவித்து வருகிறது எஸ் பேங்க். அதன் உரிமையாளர் ராணா கபூர் அமலாக்கத்துறையால் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந் நிலையில், எஸ் பேங்க் சிக்கலை தீர்க்க, 10000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: எஸ் பேங்கில் 49% பங்குகளை வாங்க முடிவு செய்து இருக்கிறோம். குறைந்தபட்சம் 26% பங்குகளை வாங்குவோம். உறுதியாக எவ்வளவு பங்குகள் என்பது வாங்குவது என்பது வாரியக் கூட்டத்துக்கு பின்பு முடிவு செய்யப்படும்.
எது எப்படி இருந்தாலும் ரூ.2,450 கோடி உடனடியாக எஸ் பேங்கில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். தேவைப்பட்டால் முதலீடுகள் அதிகரிக்கப்படலாம். அதற்காக எங்கள் முதலீட்டு குழு அவர்களுடன் கலந்துரையாடி எது சாத்தியம் என்பதை ஆராயும். ஆனால் நிச்சயம் எஸ் பேங்கில் முதலீடு செய்யப்படும்.
எஸ் பேங்க் என்பது ஒரு நிறுவனம். ஆனால் ராணா கபூர் என்பவர் ஒரு தனி மனிதர். ஒரு தனி மனிதர் தவறிழைத்திருந்தால் அதற்கான விலையை அவர் கொடுப்பார். நிறுவனம் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
[youtube-feed feed=1]