சென்னை: சண்டாளர் என்ற வார்த்தை பயன்படுத்திய கந்த சஷ்டி கவசம் எழுதியவர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு போடுவீர்களா? இந்த  சண்டாளன் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியவர் கருணாநிதி. என நாம் தமிழர் கட்சி தலைவர்  சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

கருணாநிதி குறித்த அதிமுக பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி ! சதிகாரன் கருனாநிதி ! சன்டாலன் கருணாநிதி !  என்ற பாடல் நாம் தமிழர் கட்சியைச்சேர்ந்த துரைமுருகன் விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் பேசியத்தை தொடர்ந்து, பேசும்பொருளாக மாறி உள்ளது. அதே வேளையில் அந்த பாடலும் டிரெண்டிங்காகி வருகிறது

இதற்கிடையில், சட்டாளன் என்பது ஒரு சாதிய சொல் என்று கூறப்படுகிறது.   சண்டாளர்கள் எனப்படும் ஒரு தரப்பினர் பாரம்பரியமாக தீண்டத்தகாதவராக கருதப்படுவதாக கூறப்படுகிறது.  ஆனால், சட்டாளன் என்ற வார்த்தை தமிழ்நாட்டில் பேசும் வழக்குச்சொல்லாகவே இருந்து வருகிறது. பல நூல்களில் அந்த வார்த்தை இடம்பெற்றுள்ளது.  நூறாண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்ட கந்த சஷ்டி கவசத்திலும் (கந்த சஷ்டி கவசம் என்பது தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.) அந்த வார்த்தை இடம்பெறுகிறது.   அதை யாரும் தீண்டத்தகாத வார்த்தையாக கருதாமல் வழக்குச் சொல்லாகவே கருதி வருகின்றனர். பொதுவாக,  கொடுமைக்காரர்களை பார்த்து கூறும் வார்த்தையாகவே சண்டாளன் என்ற வார்த்தை  சொல்லப்படுகிறது. ஆனால், தற்போது சண்டாளன் என்ற வார்த்தையை கொண்டு அரசியல் சதுரங்கம் நடைபெற்று வருகிறது.  இதை வார்த்தையை உபயோகித்ததாக கூறித்தான் சாட்டை துரைமுருகன் மீது காவல்துறையினர் எஸ்சி எஸ்டி வழக்கை பதிவு செய்து கைது செய்தது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்,  சண்டாளன் என்று ஒரு சமூகம் இருப்பதே தெரியாது என்று கூறி உள்ளார்-. மேலும், இந்த  சண்டாளன் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியவர் கருணாநிதி. சண்டாளர் என்ற வார்த்தை பயன்படுத்தியதால் கந்த சஷ்டி கவசம் எழுதியவர் மீதும் எஸ்சி, எஸ்டி வழக்கு போட முடியுமா?  என கேள்வி எழுப்பியதுடன், சண்டாளன் என்ற வார்த்தை கிராமங்களில் இயல்பாக பயன்படுத்தப்படும் வார்த்தை என்றும், அதை தானும், வழக்கு மொழியாக தான் பேசினேன் என்று கூறியதுடன்,  திருமூலர் வரை சண்டாளர் வார்த்தை பயன்படுத்தி உள்ளனர் என தெளிவு படுத்தினார்.

 “அந்த வார்த்தை உடன் சினிமா பாடல்கள் உள்ளன. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை அந்த வார்த்தையை பயன்படுத்தி பலமுறை அறிக்கை எழுதியுள்ளார்.   “அ.தி.மு.க. பாடலை பாடிய சாட்டை துரைமுருகனை கைது செய்தவர்கள், அ.தி.மு.க. மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” எனவும் கேள்வியெழுப்பினார்.

கலைஞரை இகழ்பவர்கள் ஞான சூனியங்கள்! பீட்டர் அல்போன்ஸ் காட்டம்…