டாக்கா: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வெற்றிக்கு இன்னும் 285 ரன்கள் தேவை என்ற நிலையில், விண்டீஸ் அணியின் கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன. மேலும், 1 நாள் ஆட்டம் இன்னும் மீதமுள்ளது.

வங்கசேத அணி, முதல் இன்னிங்ஸில் 430 ரன்கள் அடிக்க, விண்டீஸ் அணியோ 259 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே, 171 ரன்கள் முன்னிலைப் பெற்ற வங்கதேச அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளுக்கு 223 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்து, 395 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதன்படி, தனது ஆட்டத்தை துவக்கிய விண்டீஸ் அணியின் துவக்க வீரர்கள் ஏமாற்றினர். பிராத்வெய்ட் 20 ரன்களும், ஜான் கேம்ப்பெல் 23 ரன்களும் அடித்த அவுட்டடாக, ஷெய்னே மோஸ்லே 12 ரன்கள் மட்டுமே அடித்தார். தற்போது பான்னெர் 15 ரன்களுடனும், கைல் மேயர்ஸ் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

விண்டீஸ் அணியின் 3 விக்கெட்டுகளையும் வங்கதேசத்தின் மெஹிண்டி ஹசன் கைப்பற்றினார். நாளை ஒருநாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் விண்டீஸ் அணியை வீழ்த்துமா? என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.