டெல்லி: மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை 8வது மறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தராமன் தாக்கல் செய்கிறர். இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரி விகிதத்தில் மாற்றம் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாட்டின் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் குறித்து மக்கள் மட்டுமின்றி தொழில் நிறுவனங்களில் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.
2025ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) குடியரசு தலைவர் முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில், வரி விதிப்பில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் வரி அடுக்குகளில் மாற்றங்கள் இருக்கும் என நம்பப்படுகிறது. மேலும், ரூ.15,00,000 முதல் ரூ.18,00,000 வரையிலான வருமான நிலைகளுக்கு அரசாங்கம் கூடுதலாக 25% வரி விகிதத்தை அறிமுகப்படுத்தலாம், அதே நேரத்தில் ரூ.18,00,000 க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30% வரி விகிதத்தில் விதிக்கப்படலாம் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த மத்திய பட்ஜெட்டில் ஜவுளி துறைக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்பு திட்டங்களையும், சலுகைகளையும் அறிவிக்க வேண்டும் என இந்திய ஜவுளி தொழில்கள் கூட்டமைப்பு சார்பில் பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் பிரபு தாமோதரன் தெரிவித்துள்ளார்.
அதுபோல, மருத்துவ துறையிலும் மாற்றங்கள் ஏற்படும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், 21 ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் ஏற்பட்ட மாற்றம், உயர்தர, மலிவு மருத்துவ தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய மையமாக நாட்டை நிலைநிறுத்தியுள்ளது.
பொருளாதாரத்தில் காணப்படும் பல்வேறு சுற்றுச்சூழல் மாற்றங்களின் காலநிலை நோய் பரவல் மற்றும் சமூக பொருளாதார அமைப்புகளில் ஏற்படும் எதிர்மறை தாக்கங்கள் போன்றவை மூலம் ஆரோக்கியத்தை முற்றிலும் பாதிப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், சுகாதார அமைப்பை மேம்படுத்தவும் மற்றும் சுகாதார அமைப்பின் திறனை வலுப்படுத்தவும் இந்த குறிப்பிட்ட ஒதுக்கீடுகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.