பனாஜி:
மகாராஷ்டிராவில் பாஜகவுடனான உறவை முறித்துவிட்டு, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்துள்ள சிவசேனா கட்சி, கோவா மாநிலத்திலும், பாஜக ஆட்சிக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற கோவா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறாத நிலையில், காங்கிரஸ் கட்சியை முன்னிலை வகித்தது. ஆனால், கோவா முன்னேற்றக் கட்சி உள்பட சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியை பிடித்து, முதல்வர் மனோகர் பரிக்கர் ஆட்சி அமைச்சர்.
ஆனால், அவரது மறைவுக்கு பிறகு, புதிய முதல்வராக பிரமோத் சாவ்ந்த் பதவி ஏற்றார். பின்னர் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு, சுயேட்சை உறுப்பினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இதனால், கோவா முன்னேற்ற கட்சியின் தலைவரும் முன்னாள் கோவா முதல்வருமான விஜய் சர்தேசாய், இனி நாங்கள் பாஜகவுடன் இணைந்து இருக்கப் போவதில்லை” என தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
இதற்கிடையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆசைக்காட்டி, அவர்களை பாஜக தங்களது கட்சிக்குள் இணைத்துக்கொண்டது.
இந்த நிலையில், கோவாவில் பாஜக ஆட்சியை வீழ்த்தும் வகையில், கோவா பார்வார்ட் கட்சி உடன் சிவசேனா இணைது புதிய கூட்டணியை உருவாக்கப்போவதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார்.
இது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.