சென்னை:  திமுக அரசு பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.5ஆயிரம் வரவு வைத்துள்ளது பேசும்பொருளாக மாறி உள்ள நிலையில்,  பீகாரைப்போல தமிழ்நாட்டிலும்  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெண்களின் வங்கி கணக்கில் ரூ.10ஆயிரம் வரவு வைக்குமா? என  கேள்வி எழுந்துள்ளது. பெண்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

திமுக அரசு இன்று திடீரென மகளிர் உரிமை தொகை பெறும் சுமார் 1.31 கோடி பெண்களுக்கு ரூ.5ஆயிரம் வரவு வைத்துள்ளது. இது தேர்தலுக்கான கையூட்டு  பணம் என சமூக வலைதளங்களிலும்,  அரசியல் கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர். அதேவேளையில், சமூக ஆர்வலர்களும், காங்கிரஸ் தலைவர்களும், கடந்த ஆண்டுபீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, அம்மாநில அரசு  பெண்களின் வங்கி கணக்கில் ரூ.10ஆயிரம் போட்டது.  இதன்முலம் அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.

இதை சுட்டிக்காட்டி, திமுக அரசின் நடவடிக்கை பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், பீகாரை போல தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ரூ.10ஆயிரம் வரவு வைக்குமா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

அதாவது,  பீகார் மாநிலத்தில்  2025ம் ஆண்டு  டிசம்பரில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், செப்டம்பர்மாதம்,   பெண்கள் சுயதொழில் தொடங்க உதவும் வகையில் ரூ.10,000 நிதியுதவி வழங்கும் புதிய திட்டம்தொடங்கி வைக்கப்பட்டது. அதாவது  பீகாரில்  2025, செப்.24 என்று பிரதமர் மோடி பெண்கள் சுயதொழில் திட்டத்தை  தொடங்கி வைத்தார்.  இந்த திட்டத்துக்கு  ‘முக்கியமந்திரி மஹிலா ரோஜ்கர் யோஜனா’ என்ற பெயரிடப்பட்டது.  இந்த திட்டத்தை பீகார் அரசு செயல்படுத்தும் வகையில், சுமார் 75 ஆயிரம் பெண்களுக்கு மாதம் ரூ.10,000 வழங்கப்பட்டு வருகிறது.   இந்த திட்டத்திற்கு  மத்திய அரசு ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

பீகாரில் கடந்த 2025ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருந்த  நிலையில்,  செப்டம்பர் மாதம் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம்  பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், தேர்தல் களத்திலும் முக்கியமானதாக  பார்க்கப்பட்டது. குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை குடும்பங்களை இலக்காகக் கொண்டு  தேர்தலுக்கு முன்பாகவே  மகளிருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைத்து, என்டிஏ கூட்டணி வாக்குகளை அள்ளிது.

இந்த ரூ.10ஆயிரம்,  அங்கு டிசம்பரில்  நடைபெற்ற தேர்தலின்போது,  இன்டி கூட்டணியின் கடுமையான போட்டிகளுக்கு இடையில்,  முதல்வர் நிதீஷ் குமார்  பாஜக இணைந்த  என்டிஏ கூட்டணி வெற்றிக்கு அடித்தளமாக அமைத்நதது. அதாவது, அங்க  202 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி  வெற்றியை பெற்றது.  இதற்கு காரணம், அக்கட்சி பெண்களுக்கு வழங்கிய ரூ.10 ஆயிரம் என பேசப்பட்டது.

அப்போதே பீகார் மாடலில் தமிழ்நாட்டிலும் மத்திய அரசு சார்பாக ரூ.10 ஆயிரம் அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்து வருகி றது.  ஆனால், அதுகுறித்து மத்தியஅரசோ, அதிமுககோவ எதும் கூறாத நிலையில், திமுக அரசு, அதை செயல்படுத்தி உள்ளது.  பீகார்  பாணியில் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் வரவு வைத்திருக்கிறார்.

அதாவது, தேர்தல் தேதி அறிவித்து விட்டால், மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியாத நிலை ஏற்படலாம் என்பதால்,   3 மாதங்களுக்கான தொகையையும், கோடை கால சிறப்பு தொகுப்பாக ரூ.2 ஆயிரமும் சேர்த்து ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டிருக்கிறது.  அதாவது, . பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான மகளிர் உரிமை ரூ.3 ஆயிரமும், கோடை கால சிறப்பு தொகுப்பாக ரூ.2 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொங்கல் பண்டிகையின் போது ரூ.3 ஆயிரம் ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்பட்ட நிலையில், தற்போதும் ரூ.5 ஆயிரம் மொத்தமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களில் மட்டும் தமிழக அரசு ரூ.8 ஆயிரம் கொடுத்துள்ளது.  இது திமுகவின் வெற்றிக்கு வழி வகுக்கும் என நம்பப்படுகிறது.

இதன் காரணமாக  பாஜக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  சோர்வடைந்துள்ளது.  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறுவோம் என மார்தட்டி வந்த பாஜக அதிமுக  கட்சிகளின் தலைவர்கள், திமுகவின் அதிரடி ஆட்டத்தால் மிரண்டுபோய் உள்ளனர்.

இதனால் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில்,  குறிப்பாக பெண்களின் வாக்குகளை பெற,  பீகாரைப் போல தமிழ்நாட்டிலும், மத்தியஅசு சார்பில், பெண்களுக்கான ஏதாவது ஒரு திட்டத்தை தொடங்கி உடனே  வங்கிகணக்கில்  தலா ரூ.10ஆயிரம்  வரவு வைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் எதிரொலி: மகளிர் உரிமை திட்ட பெண்களுக்கு இந்த மாதம் ரூ.5000 வரவு வைப்பு…. வீடியோ

[youtube-feed feed=1]