சென்னை:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் 3வது கட்டத்திற்கு சென்றுள்ள நிலையில், அதன் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கு மேலும் சில நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.
முன்னதாக சென்னை சாந்தோம் அம்மா உணவகத்தில், ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, டெல்லி மாநாட்டில் பங்கேற்றோர் விவரங்கள் தெரியாததால் அரசுக்கு தாங்களாகவே தெரிவிக்க கோரினோம். தாங்களாகவே முன்வந்து தெரிவித்தால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் ஈஷாவில் நடைபெற்ற கூட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர், கொரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களை யும் சோதனைக்கு உட்படுத்துவோம். கொரோனா தொற்றின் தாக்கத்தை அறியாமல் மக்கள் வெளியே வருகின்றனர் என்றார்.
மேலும், தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்று கூறியவர், அம்மா உணவகங்களில் மட்டும் தான் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி தரப்படுகிறது , இதைப்பர்த்து, பல்வேறு மாநிலங்களிலும் தொடங்கப்பட்ட வருகிறருது, பாராட்டப்பட்ட அம்மா உணவக திட்டம் இன்று மக்களுக்கு கைகொடுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.