ஐதராபாத்:

‘ஒவைசியின் தாடியை மழித்து, தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர் தனது தாடையில் ஒட்டு, அவரை முல்லா வாக மாற்றுவோம் என்று தெலுங்கானா பாஜக எம்.பி. அரவிந்த் குமார் கூறினார்.  இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஒவைசிக்கு எதிராக மத தூண்டுதலையும், வகுப்புவாத  மோதல்களையும் ஏற்படுத்தும் நோக்கில் பாஜக எம்.பி. பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மத்தியபாஜக அரசின் நடவடிக்கைளை கடுமையாக எதிர்த்து வருபவர் தெலங்கானாவைச் சேர்ந்த  ஏ.ஐ.எம்.ஐ.எம் என்ற இஸ்லாமியக் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி. ஏற்கனவே இந்தி திணிப்பு, என்சிஆர், முத்தலாக் உள்பட பல்வேறு அறிவிப்புகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருபவர், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராகவும் போராடி வருகிறார். சமீபத்தில் நிஜாமாபாத்தில் நடைபெற்ற அவரது கட்சி கூட்டத்தில்,  CAA அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும், நாடு உடனடி ஆபத்தில் உள்ளது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், நிஜாமாபாத் ஈட்கா மைதானத்தில் நடைபெற்ற பாரதியஜனதா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அந்த தொகுதி எம்.பி.யான அரவிந்த் குமார், ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன்  குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.

அப்போது,  “அசாதுதீன் ஒவைசி,  ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை கிழித்துவிடுவார் என்று கூறுகிறார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, உங்கள் சொந்த சகோதரர் (அக்பருதீன்) 50 முறை குத்தப்பட்டும், உங்களது சொந்தமான முகமது பெஹல்வான்  20 முறை   சுட்டுக் கொல்லப்பட்டார் .  உங்கள் சகோதரர்  ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இப்படி இருக்கும்போது நீங்கள் பாஜகவை கிழிக்க அச்சுறுத்துவீர்களா? ” என்று ஆவேசமாக கூறினார்.

தொடர்ந்து பேசியவர், நான் ஒரு கிரேன் கொண்டு வருவேன், அதில் உன்னை (ஓவைசி) தலைகீழாக தொங்க விட்டு, தாடியை மழித்து  மொட்டையடிப்பேன்; உங்கள் தாடியை தூக்கி வீசமாட்டேன்; அதற்கு பதிலாக  பதவி உயர்வு தருவேன் என்று கூறியவர், அதை தெலுங்கான முதல்வர் (கே.சந்திரசேகரராவ்)  கே.சி.ஆரின் முகத்தில் ஒட்டி, அவரை முல்லாவாக மக்களுக்கு தெரியும்படி செய்வேன் என்று அகங்காரமாக கூறினார்.

மேலும், , முதல்வர் கே.சி.ஆர் ஒரு முல்லாவாக மாறிவிட்டார் என்றும், முதல்வரின் போர்வையில் ஒரு முல்லா இருந்து வருகிறார், அவரது மகன் நாத்திகர். இந்து தர்மத்தைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்று கேள்வி எழுப்பியவர்,  ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பாஜக குடியுரிமை திருத்த சட்டத்தில் இருந்து  பின்வாங்காது என்று மேலும் கூறினார்.

“நான்கு பேர் நான்கு பேருந்துகளை எரித்ததால், நாங்கள் திரும்பிச் செல்ல மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்தவர்,   எதிர்காலத்தில் இன்னும் பல கடுமையான சட்டங்கள் வரும் என்றும் கூறினார்.

பாஜக எம்.பி.யின் பேச்சு அகங்கார பேச்சு, இரு மதத்தினரிடையே மோதலை தூண்டும் வகையிலும்,வகுப்புவாத  மோதல்களையும் ஏற்படுத்தும் நோக்கில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.