கான்பெரா: குறைந்தப் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியப் பந்து வீச்சாளர் என்ற அஜித் அகர்கரின் 18 ஆண்டுகால சாதனையை முகமது ஷமி முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாளை, இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது & இறுதி ஒருநாள் போட்டி கான்பெராவில் நடக்கிறது.
தற்போதைய நிலையில், 79 போட்டிகளில் ஆடி, 148 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் முகமது ஷமி. நாளையப் போட்டியில், அவர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினால், அஜித் அகர்கரின் விரைவான 150 விக்கெட்டுகள் சாதனையை அவர் முறியடிக்கலாம்.
அஜித் அகர்கர் மொத்தம் 97 ஒருநாள் போட்களில் ஆடி, 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால், தனது 80வது ஒருநாள் போட்டியிலேயே முகமது ஷமி அதை செய்தால், இந்தியளவில் ஒரு புதிய சாதனையைப் படைப்பார்.
தற்போது உலகளவில் பார்த்தால், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் 77 போட்டிகளில் 150 விக்கெட்டுகளையும், பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சாக்லின் முஸ்தாக் 79 போட்டிகளில் 150 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். முகமது ஷமி நாளைய தினம் 150 விக்கெட்டுகளை வீழ்த்தினால், உலக அளவில் 3வது இடத்தைப் பெறுவார்.