சென்னை: தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு பற்றி ஒருவாரத்தில் நல்ல முடிவு வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக  திரையரங்குகள் மூடப்பட்டன. அவற்றை திறக்க மத்திய அரசு 5ம் கட்ட ஊரடங்கு தளர்வின் போது அனுமதி அளித்தது. அதற்கான வழிகாட்டு நெறி முறைகளையும் வெளியிட்டது.
இதையடுத்து, டெல்லி உள்ளிட்ட 14 மாநிலங்களில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.  ஆனால் தமிழகத்தில் இதுவரை திரையரங்குகள் திறப்பு குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந் நிலையில் இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி இருப்பதாவது: திரையரங்கு உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளோம். ஒருவாரத்தில் நல்ல முடிவு வரும் என்றார்.

[youtube-feed feed=1]