மதுரை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, அதிமுக, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.

நடைபெற்று முடிந்துள்ள  ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அதிமுகவைவிட  தி.மு.க அதிக இடங்களைப் பிடித்துள்ளது. இதனால், நடைபெற்ற  மாநகராட்சி, நகராட்சித் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட ஏற்கனவே  விருப்ப மனு கொடுத்தவர்களை அழைத்து நேர் காணல் நடைபெற்று வருகிறது. மதுரையில் உள்ள  100 மாநகராட்சி வார்டுகளில் போட்டியிட, 800-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் ஏற்கனவே  விருப்ப மனு கொடுத்துள்ள நிலையில், அவர்களை ஓட்டல் ஒன்றுக்கு வரவழைத்த மதுரை மாநகரச் செயலாளரும் அமைச்சருமான செல்லூர் ராஜூ, புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா, தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், கிரம்மர் சுரேஷ் ஆகியோர்  நேர்காணல் நடத்திவருகிறார்கள்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் விரைவில் விடுபட்ட பகுதிகளுக்கான தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும்,  வருகின்ற 20-ம் தேதி நகராட்சி, மாநகராட்சி தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.