கொல்கத்தா:

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.


மதத் துன்புறுத்தலுக்கு ஆளாகி நம் நாட்டுக்கு வருவோருக்கு நீதியும் மரியாதையும் தரப்பட வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, இப்படி பாதிப்புக்குள்ளான இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின், பாரீஸ் சமுகத்தினருக்கு நம்மை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

இது குறித்து பதில் அளித்த மம்தா பானர்ஜி, குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற்றால், அந்த முடிவுக்கு ஆதரவு தருவோம், மாறாக, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரிக்கும் கேள்விக்கே இடமில்லை என்றார்.