
டில்லி,
பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விசாரணைக்கு ஆஜராவதை உள்துறை அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா ஜூலை 10ந்தேதி அன்று விசாரணைக்கு ஆஜராவதை உள்துறை அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல கிங்பிஷர் விமான நிறுவன அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளில் வாங்கிய கடன், வட்டியுடன் சேர்த்து 9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் விஜய்மல்லையா லண்டனுக்கு தப்பிவிட்டார். அதைத்தொடர்ந்து கடனை மீட்க மல்லையாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, நிறுவனங்களில் அவர் வைத்துள்ள பங்குகளும் முடக்கப்பட்டன.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி, டியாஜியோ நிறுவனத்திடம் இருந்து பெற்ற 260 கோடி மதிப்பிலான பங்குகளை நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமலேயே மல்லையா தனது 3 வாரிசுகளுக்கு மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், மல்லையா ஜூலை 10ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என உத்தரவிட்டனர்.
இதற்கிடையில் இங்கிலாந்தில் பதுங்கியுள்ள விஜய் மல்லையா, இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று அங்கு கைது செய்யப்பட்டார். அங்குள்ள வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரான அவர், சில நிமிடங்களிலேயே ஜாமீன் பெற்றார். அவரை இந்தியாவுக்கு கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கான இந்தியாவில் இருந்து அமலாக்கத்துறை, சிபிஐ அதிகாரிகள் அடங்கிய குழு லண்டன் சென்றுள்ளது.
இதற்கிடையில் நேற்றைய விசாரணையின்போது உச்சநீதி மன்றம், மத்திய உள்துறை அமைச்சகம் மல்லையாவை ஜூலை 10ந்தேதி நடைபெற இருக்கும் விசாரணையின்போது ஆஜராவதை உறுதி செய்ய வேண்டும் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]