டில்லி,

லங்கையில் நடைபெறும்  புத்த விசாக விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று இலங்கை செல்கிறார்.

இரண்டு நாள் பயணமாக கொழும்பு செல்லும் பிரதமர் மோடி,  அங்கு நடைபெறும் சர்வதேச புத்த விசாக விழாவில் பங்கேற்கிறார். ஆனால், தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து பேச மாட்டார் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இலங்கையில் நடைபெற்று புத்த விசாக எனப்படும்  பிரமாண்ட நிகழ்ச்சியில் மோடி கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார்  100 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தலைவர்களும் அமைச்சர்களும் கலந்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து மலையக தமிழர்கள் வசக்கும் பகுதியான  கண்டிசென்று அங்குள்ள புத்த ஆலயங்களுக்கு சென்ற தரிசிக்க இருப்பதாகவும், தொடர்ந்து  அங்குள்ள தமிழ் மக்களை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து இந்திய அரசு சார்பாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை தொடங்கி வைப்பார் என்றும் கூறப்பட்டு உள்ளது.

தொடர்ந்து அதிபர் சிறிசேனாவுடன் இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை, மீனவர்களின் படகுகள் மீட்புது, இலங்கை ராணுவத்தினரின் துப்பாக்கி சூடு போன்றவை குறித்து விவாதிப்பார் என தெரிகிறது.

ஆனால், இந்த பயணத்தின் போது இலங்கை அரசுடன் பிரதமர் மோடி எந்த வித பேச்சுவார்த்தையும் நடத்த மாட்டார் என்றும் எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது என்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு முடிவு ஏற்படும் என்று தமிழகமே எதிர்பார்த்திருந்த நிலையில் வெளியுறவுத்துறை அதிகாரிகளின் இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உளளது.