லாக்டவுன் மேலும் நீட்டிப்பா? மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை….

Must read

சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதில், கொரோனா தடுப்பு மற்றும், பொதுமுடக்கம்  மற்றும் தளர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை (23ந்தேதி மாலை நிலவரம்) 1,92,964ஆக அதிகரித்துள்ளது.  அதுபோல உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,232ஆக அதிகரித்துள்ளது. இன்று 5,210 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,36,793ஆக அதிகரித்துள்ளது.
அதிக பட்சமாக  சென்னையில்,  1,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  90,900 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தின்  பல பகுதிகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு, கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகதலைமைச் செயலாளர் சண்முகம், சென்னையை தவிர்த்து பிற மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.  மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட வேண்மா என்பது குறித்தும்  ஆலோசனை  மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் பொதுமுடக்கம் ஜூலை31 ஆம் தேதி  முடியவுள்ள நிலையில், பொதுமுடக்கம் நீட்டிக்கப்படாது என சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில், தலைமைச் செயலாளரின்  ஆலோசனைக்கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article