சென்னை

சென்னை விமான நிலைய விரிவக்காத்துக்காக சி எம் டி ஏ ஒதுக்கிய நிலங்கள் திரும்பப் பெறலாம் என கூறப்படுகிறது.

கடந்த 2007 ஆம் ஆண்டு சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் (சிஎம்டிஏ) சார்பில் 852 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.    அந்த நிலங்கள்  இதுவரை பயன்படுத்தப்படவில்லை.  கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய விமான நிலைய ஆணையம் விமான இயக்கம் அதிகப்படுத்தப்பட மாட்டாது எனக் கூறி இந்த திட்டத்தை செயல்படுத்தாததே இதற்குக் காரணமாகும்.

இந்த நிலங்கள் காஞ்சீபுரம் மாவட்டத்தின் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள மணப்பாக்கம், கெருகம்பாக்கம், கோலப்பாக்கம், தாரபாக்கம், மற்றும் கோவூர் கிராமங்களில் அமைந்துள்ளன. நகரமயமாக்கல் திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடி இந்த நிலங்களை மேம்பாடு செய்வது குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறது.  இந்த பணியை ஐஐடியின் கியூப் பிரிவு செய்து வருகிறது.

கியூப் பிரிவு அதிகாரி ஒருவர் செயற்கைக் கோள் படங்கள் மூலம் இது குறித்த ஆய்வு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை ஆய்வு ஆகியவற்றை நடத்த உள்ளனர்.  கன மழை பெய்யும் போது இந்த நிலங்களில் எத்தனை பரப்பளவு பாதிக்கப்படலாம் என்பது குறித்தும் கியூப் பிரிவு ஆய்வு செய்ய உள்ளது.  மேலும் கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆய்வுப் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை விமான நிலையம் வெள்ளம் காரணமாக நான்கு நாட்கள் மூடப்பட்டது.  அப்போது விமான நிலைய ஆணையம் மற்றும் ஐஐடி இணைந்து விமான நிலையம் மற்றும் சுற்றுப்புறங்களின் வரைபடத்தை டிரோன் உதவி மூலம் உருவாக்கியது.   அதில் விமான நிலையத்தில் இருந்து சுமார் 5 முதல் 10 கிமீ சுற்றளவில் நிலையத்தைச் சுற்றி உள்ள நீர்நிலைகள் வரைபடம் உருவாக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் தற்போதைய ஆய்வு புதியது எனவும் முந்தைய ஆய்வுடன் தொடர்புடையது இல்லை எனவும் சிஎம்டிஏ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.   அதே வேளையில் இந்த நிலங்கள் இன்னும் விமான நிலைய விரிவாக்கப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதை மாற்றாமல் உள்ளது.  எனவே இந்த நிலங்களில் எவ்வித வளர்ச்சி திட்டமும் செய்ய முடியாது எனவும் கூறப்படுகிறது.