பீகாரில் பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சி’’ -பஸ்வான் மகன் அதிரடி..

பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகளுக்கு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. ஒரு அணியாகவும், ஆர்.ஜே.டி. –காங்கிரஸ்  மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன.

இந்த இரு அணிகளுக்கு இடையே தான் அங்குப் பிரதான போட்டியாகும்.

மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி, தனித்து களம் இறங்கியுள்ளது.

அந்த கட்சி பா.ஜ.க.வுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள லோக்ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான், ‘’ தப்பித்தவறி நிதிஷ்குமார் மீண்டும் பீகார் முதல்-அமைச்சராக வந்து விட்டால், இந்த மாநிலம் அழிந்து போகும்’’ என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

‘’பீகார் மாநிலத்தில் அடுத்து பா.ஜ.க.வும் , லோக்ஜனசக்தி கட்சியும் இணைந்து புதிய ஆட்சி அமைக்கும் ’’ என்று குறிப்பிட்ட சிராக்’’ இது குறித்து பல்வேறு வேட்பாளர்களிடம் நான் பேசி விட்டேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

-பா.பாரதி.