டெல்லி
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகளும் ஏப்ரல் மாத மத்தியில் நடைபெற வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வரும் COVID – 19 அனைத்து நாடுகளுக்கும் பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000 த்தை தாண்டியுள்ளது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், ஏப்ரல் 14 வரை நாடு முழுதும் ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது.
இச்சூழலில் ஐபிஎல் பார்வையாளர்கள் இல்லாமல் திட்டமிட்டபடி நடைபெறுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ” ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைக்கும் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை, மீண்டும் போட்டிகளை நடத்துவது குறித்தும் தற்போது வரை ஆலோசிக்கவில்லை” என்றார்.
வெளிநாட்டு வீரர்களுக்கு விசா விசாகட்டுப்பாடு நிலவுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதும் ஐபிஎல் போட்டிகளின் ஒத்திவைப்பை உறுதி செய்துள்ளது…