சென்னை: வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கும் போது வீடு ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கு நஷ்ட ஈடு வழங்குவது நாம் அறிந்திருப்போம். ஆனால், அந்தக் கடன் தொகைக்கான வட்டியும் வழங்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. தமிழ்நாடு வீட்டு மனை விதிகளுக்கான பொறுப்பாணையம் அவ்வாறு இல்லையென்கிறது.

கோவையின் உட்புறப் பகுதியான மறுகரையில், கனரா வங்கி ஊழியர்கள் சங்கம் மேற்கொண்ட வீடு வாங்குவோருக்கான திட்டத்தில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து கொண்டு வந்த புகாரில் தான் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

2013 ஆகஸ்ட் 1 இல், “கிராண்ட் ஹில்ஸ் அபார்ட்மெண்ட்ஸ்“ என்ற பெயரில் கட்டுமானத்திற்கான ஒப்பந்தம் ஒரு நிறுவனத்துடன் செய்யப்பட்டது. இரண்டு வருடத்தில் கட்டிடத்தை ஒப்படைப்பதெனவும் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை கட்டிடம் ஒப்படைக்கப் படவில்லை. எனவே, இது சம்மந்தமாகக் குறிப்பிட்ட பொறுப்பாணையத்திற்குப் புகார் கொண்டு வரப்பட்டது.

இந்த புகார் மனுவின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர் அடைந்த நஷ்டத்தையும், கஷ்டங்களையும் மனதில் கொண்டு நஷ்ட ஈட்டுத தொகையை அறிவித்தது.

அதில் கோரியிருந்த படி மாதம் ரூ 12,000 என்பது மறுக்கப்பட்டு ரு 10,000 ஆகவும், மேலும் கேட்டிருந்த கடன் தொகைக்கான வட்டியைத் தர மறுத்தும், நஷ்ட ஈட்டின் மொத்தத் தொகை 4.80 லட்சம் வழங்கக் கூறியும், பொறுப்பாணையம் அறிவுறுத்தியது. மேலும், இதனைக் குறிப்பிட்ட வீட்டு மனை நிறுவனம் 60 நாட்களுக்குள் வழங்கவும் கோரியிருந்தது.