காஷ்மீர்

காஷ்மீர் மாநில யூனியன் பிரதேசங்களில் பணி புரிய அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு மாநிலத்தை ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் என்னும் யூனியன்  பிரதேசங்களாகப் பிரித்தது   இந்த பிரிவு வரும் 31 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.  இதில் லடாக் பிரதேசம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வருவதால் இங்குச் சட்டப்பேரவை கிடையாது.

இந்த புதிய யூனியன் பிரதேசங்களுக்கு பல அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் 4 லட்சம் மாநில அர்சு ஊழியர்கள், 47 ஐபிஎஸ், ஐம்பத்தெட்டு ஐஎஃப் எஸ் மற்றும் 67 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளன.   மொத்தம் ஐஏஎஸ் அதிகாரிகள் 138 பேர் தேவையாக உள்ளனர்.  இவர்களில் 15 பேர் மத்திய அரசுப் பணி அமர்த்தும்.

புதியதாக பிரிக்கப்படும் யூனியன் பிரதேசங்களில் முன்பு மாநிலத்தில் பணி புரிந்தவர்களே தொடர உள்ளனர்.  ஆனால் பற்றாக்குறையாக உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்ய வேண்டி உள்ளது. அதற்குக் காஷ்மீர் மாநிலத்தில் இருந்து அதிகாரிகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

ஆனால் காஷ்மீர் மாநிலத்தில் அமைய உள்ள யூனியன்  பிரதேசங்களில் பணி புரிய அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.   தற்போதுள்ள நிலையில் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகளில் பலர் அருணாசலப் பிரதேசம். கோவா, மிசோரம் உள்ளிட்ட பகுதிகளில் பணி புரிவதால் தங்களை வெளியூரை சேர்ந்தவர்கள் எனவே மாநில மக்கள் கருதுவார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் லடாக் பகுதி நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் அங்கு பணிபுரியப் பலர் விரும்பவில்லை எனத் தெரிய வந்துள்ளது.  எனவே லடாக் பகுதிக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.  அதனால் அரசு அதிகாரிகள் ஒரு வருடம் லடாக் பகுதியில் அவசியம் பணி புரிய வேண்டும் என உத்தரவிட அரசு உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது.