அமெரிக்க வெளிநாட்டு மாணவர் சட்டம் : இந்திய மாணவர்கள் கதி என்ன?

வாஷிங்டன்

மெரிக்க அரசு இனி அங்குள்ள வெளிநாட்டு மாணவர்கள் அங்கு தங்கும் ஒவ்வொரு வருடமும் புதிய அனுமதி பெற வேண்டும் என கொண்டு வரப்போகும் சட்டத்தினால் இந்திய மாணவர்கள் துயரம் அடைந்துள்ளனர்.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு, வெளிநாட்டுக் கொள்கைகளில் பல மாறுதல் ஏற்படுத்தி வருகிறது.  அவ்வகையில் தற்போது அமெரிக்காவில் கல்வி கற்கும் வெளிநாட்டை சேர்ந்த மாணவர்கள், ஒவ்வொரு வருடமும் தங்குவதற்கான அனுமதியை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என ஒரு சட்டம் இயற்ற உள்ளது.  இப்போது ஆரம்பக்கட்டத்தில் உள்ள இந்த தீர்மானம் சட்டமாக இன்னும் 18 மாதங்கள் ஆகக்கூடும்.

கிட்டத்தட்ட 1,66,000 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி கற்கிறார்கள்.   அடுத்த படியாக சீன மாணவர்கள் உள்ளனர்.  வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 47% மாணவர்கள் இந்தியர்கள்.  இந்த சட்டம் இயற்றப்பட்டால் மாணவர்களுக்கு அனுமதி பெற பணச்செலவும், நேரமும், அதிகம் ஆகும்.  இதனால் இந்திய மாணவர்கள் மிகவும் துயருற நேரிடும்.

அதே நேரத்தில் கல்வி பெறும் முழு ஆண்டுகளுக்கும் ஒரே முறை அனுமதி வாங்கலாம் என சட்டத்தை மாற்ற சிலர் ஆலோசனை கூறுகின்றனர்.  ஆனால் மாணவர் தர்ப்பில் அதற்கு எதிர்ப்பு உள்ளது.   மேற்படிப்பு அங்கேயே பயில நினைக்கும் மாணவர்களால் கல்வியை தொடர இயலாது என சொல்கிறார்கள்.

ஆனால் சில அமெரிக்கர்க கல்வியாளர்கள், இந்த சட்டத்தினால் அதிகம் செலவாகும் என்றெண்ணி, பல வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா வருவதை தவிர்த்து விடுவார்கள் என கூறுகின்றனர்.   இதனால் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் வருமானம் குறையும் என்பதும் பலர் வேலை இழக்கக்கூடும் என்பதும் இவர்கள் கருத்து

முன்பு இருந்ததை விட இப்போது அமெரிக்காவில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருகிறது    அமெரிக்காவில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களில் பலருக்கு விசா கெடுபிடிகளினால் ஆர்வம் குறைந்து வருவதும் இதற்கு ஒரு காரணம்


English Summary
will indians hit by America plans to tighten foreign students rule