மும்பை: தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் செய்வதற்கு மத்திய அரசு அனுமதித்தால், இந்திய அணி வரும் செப்டம்பர் மாதம் அங்கு சென்று டி-20 தொடரில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சுற்றுப்பயணம் முன்னரே திட்டமிடப்பட்டது என்றாலும்கூட, கடந்த பிப்ரவரியில் இந்தியா வந்த அந்நாட்டு கிரிக்கெட் போர்டு இயக்குநர் கிரீம் ஸ்மித், பிசிசிஐ தலைவர் கங்குலியை சந்தித்துப் பேசினார். பின்னர், டெலிகான்ஃபரன்ஸிங் மூலமாக இத்தொடர் உறுதி செய்யப்பட்டது.
மேலும், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே நாடுகளிலும் இந்திய அணியின் டி-20 தொடருக்கான சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுப் பயணங்களின் மூலம் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
வரும் செப்டம்பர் மாதம், தென்னாப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தால், தொடர் நடைபெறுவது சிரமம்தான். ஆனால், கிரிக்கெட் போட்டிகளில் எந்த பாதிப்பும் நிகழாது என்றால் நடைபெறலாம். அதேசமயம், இந்திய அரசின் அனுமதி என்பதுதான் இங்கே முதற்படி.
அரசின் அனுமதி கிடைத்தால்தான் இந்திய அணி அங்கே செல்லுமா? இல்லையா? என்பதே முடிவாகும் நிலை உள்ளது.