சென்னை:
அடுத்து வரும் 3 நாட்களுக்கு வீடு வீடாக சென்று சொட்டு மருந்து அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் 17 ஆண்டுகளாக போலியோ என ஆங்கிலத்தில் குறிக்கப்படும், இளம்பிள்ளை வாதம் நோய் இல்லாத நிலை இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், சொட்டு மருந்து முகாமை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலாளர், இன்று சொட்டு மருந்து போட்டுக் கொள்ள இயலாதவர்களுக்கு, அடுத்து வரும் 3 நாட்களுக்கு வீடு வீடாக சென்று சொட்டு மருந்து அளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
Patrikai.com official YouTube Channel