வைத்தியலிங்கம்

தஞ்சாவூர்:

திவாகரன் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா? என்ற கேள்விக்கு அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. பதில் அளித்தார்.

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. தஞ்சையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

“11 எம்.எல்.ஏக்கள். தகுதி நீக்க விவகாரத்தில் தமிழக சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தில் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இத்தீர்ப்பை வரவேற்கிறோம்.

குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது.

திவாகரனை கட்சியில் சேர்த்து கொள்வீர்களா என்று கேட்கப்படுகிறது.  அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை . பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தான் இதுவரை செயல்பட்டு வருகிறோம். பொதுக்குழு, கட்சி தலைமை எடுக்கும் முடிவு தான் எல்லோருடைய முடிவாக இருக்கும்” என்று வைத்தியலிங்கம் தெரிவித்தார்.