டெல்லி: ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது குறித்து விவாதிப்போம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் நிதி மசோதா 2021ம் மீதான விவாதத்தின் போது நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது, எரிபொருள் விலை உயர்வு குறித்த கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவர் பேசியதாவது:

எரிபொருளுக்கு வரி விதிப்பது மத்திய அரசு மட்டுமல்ல, மாநிலங்களும் விதிக்கின்றன. எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதைப் பற்றி அரசாங்கம் தொடர்ந்து கவலைப்பட்டு வருகிறது.

கலால் வரியை குறைப்பதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர் விலையை குறைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ரூ .2.5 லட்சம் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, தன்னார்வ வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களின் பங்களிப்புக்கு வரி விதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.