ஐதராபாத்:
சிஎஸ்கே கேப்டன் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவார் என தகவல்கள் பரவிய நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடு வேன் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெற்றிக்கோப்பை தட்டிப்பறிக்கும் என ஆவலோடு எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராத விதமாக 1 ரன்னில் வெற்றி வாய்ப்பை பரிதாபமாக இழந்தது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தோனி, இரு அணிகளும் பல தவறுகள் செய்த நிலை யில் குறைந்த தவறுகளை செய்த மும்பை அணி வெற்றிப்பெற்றுள்ளதாகவும், ஓர் அணியாக இது சென்னைக்கு நல்ல தொடராகவெ அமைந்தது என்றும் கூறினார்.
மேலும் ஐபிஎல் தொடரில் செய்த தவறுகள் குறித்து ஆராய இது நேரமில்லை என்று கூறிய தோனி, உலகக்கோப்பை தொடருக்கு செல்ல வேண்டி இருக்கிறது என்றார்.
தோனியின் ஓய்வு குறித்து அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது, விளையாடுவேன் என நம்பிக்கை யிருப்பதாக கூறினார். இது உலகம் முழுவதும் உள்ள தோனி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, 2014-ம் ஆண்டு இறுதியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார்.
இதையடுத்து மூன்று வடிவிலான கிரிக்கெட்டுக்கும் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்படுகிறார். இந்த பரபரப்பான நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் வெற்றிக்கோப்பையை பெற்று தந்துவிட்டு சென்னை அணி கேப்டன் தோனி ஐபிஎல் போட்டிகிளல் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல்கள் பரவின. இதன் பின் சின்ன ‘தல’ ரெய்னா நிரந்தரமாக கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்பதை அவர் சூசகமாக தெரிவித்திருப்பது சிஎஸ்கே ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.