அணைக்கட்டுகளும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுமா?

Must read

அணைக்கட்டுகளும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுமா?

** தங்களுக்கு மிருக பல மெஜாரிட்டி இருப்பதன் காரணத்தால், துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் பொதுத் துறை நிறுவனங்களை, தனியார் நிறுவனங்களிடம் தாரை வார்த்து வருகிறது ஒன்றிய மோடி அரசு!

இப்போது புதிதாக நாட்டில் உள்ள அணைகளை எல்லாம் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு “அணைக்கட்டு பாதுகாப்பு மசோதா” வை அறிமுகப் படுத்தி இருக்கிறது!

அதில், “நாடெங்கும் உள்ள அணைகளின் பாதுகாப்பு, நீர்ப் பங்கீடு, போன்ற முக்கிய விவகாரங்களை ஒன்றிய அரசே இனி ஏற்றுக் கொள்ளும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது!

ஆனால், இப்போது உள்ள ஒன்றிய மோடி அரசு, பாரபட்சமுள்ள அரசு என்பதால், இந்த மசோதா மீது மக்களுக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் நம்பிக்கை இல்லை!

அணைக் கட்டுகளும் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுமானால் நாட்டின் நிலைமை என்ன என்பதே நம் கவலை ஆகும்!

** ஓவியர் இரா. பாரி.

More articles

Latest article