துபாய்: கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் வெற்றிபெற வேண்டுமெனில், 173 ரன்களை அடிக்க வேண்டும் சென்னை அணி.
டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர் ஷப்னம் கில் 17 பந்துகளில் 26 ரன்களை அடித்தார். மற்றொரு துவக்க வீரர் நிதிஷ் ரானா 61 பந்துகளில் 87 ரன்களை விளாசினார். இதில் 4 சிக்ஸர்கள் & 10 பவுண்டரிகள் அடங்கும்.
கேப்டன் இயான் மோர்கன் 15 ரன்களே அடிக்க, முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் 10 பந்துகளை சந்தித்து 21 ரன்களை அடித்தார். கூடுதல் ரன்களாக 2 ரன்கள் கிடைத்தன.
இறுதியில், 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை எடுத்தது கொல்கத்தா அணி.
சென்னை அணியின் கரன் சர்மா, 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட் மட்டுமே எடுத்து 35 ரன்களை அதிகபட்சமாக விட்டுக்கொடுத்தார். லுங்கி நிகிடிக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன.
சென்னை அணி இந்தப் போட்டியில் வென்றால், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்து, பின்னர் சேஸிங் செய்து, அந்த அணி பெறுகின்ற முதல் வெற்றியாக இது அமையும்.