சந்திரயான் 2
சந்திரயான்2 பல தடைகளுக்குப் பிறகு GSLV-MkIII ஏவூர்தி வழியாகi ஜூலை 5 முதல் ஜூலை 16 க்குள் அனுப்பப்படும் என்றும், செப்டம்பர் 6ம் தேதி வாக்கில் சந்திரனில் தரையிறங்கும் என்றும், மிகச்சரியாக தென்துருவத்தில் தரையிறங்கினால் உலகிலேயே முதன் முறையாக நிலவின் தென்துருவத்தில் இறங்கிய முதல் நாடாக இந்தியா விளங்கும் என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்தார்
சந்திரயான் 2 திட்டத்தில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளடக்கியது. ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கியது. லேண்டர் என்பது நிலவில் ஆய்வு செய்யும் வாகனத்தை எந்தப் பிரச்னையும் இல்லாமல் நிலவில் குறிப்பிட்ட இடத்தில் தரையிறக்க உதவும் கருவியாகும். சந்திரயான் 2 திட்டத்தில் உள்ள லேண்டருக்கு விக்ரம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ரோவர் – என்பது கோள்களின் தரைப்பரப்பினை ஆராய உதவும் கருவியாகும். இந்தக்கருவி மூலம் சிறய மண், பாறை, மற்றும் அதனுள் இருக்கும் விபரங்களை படமாக எடுத்து அனுப்புதல் போன்ற பணிகளை செய்யும் கருவி. இது பெரும்பாலும் தன்னியால்பாகவே இயங்கும் வகையில் உருவாக்கபட்டிருக்கும். சந்திரயான் 2 திட்டத்தில் உள்ள ரோவர் கருவிக்கு பிரக்யான் என்ற பெயர் சூட்டப்பட்டுளளது.
ஆனால் இன்னமும் 60 நாட்கள் உள்ள நிலையில் மேற்கண்ட மூன்று அமைப்பும் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இஸ்ரோ நிறுவனம் இதுவரை லேண்டர், ரோவர் கருவிகளை உருவாக்கவில்லை, முழுக்க முழுக்க இந்தியாவிலயே உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் இதில் கூடும் கவனம் எடுத்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சமீபத்திய தகவல்படி மூன்று அமைப்புகளில் ஆர்பிட்டர் பணிகள் மட்டுமே முழுமையடைந்துள்ளதாகவும், மற்ற இரு அமைப்புகளும் முழுமையாக சோதனை செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
லேண்டர் கருவியானது இஸ்ரோவில் Lunar Terrain Test Facility (LTTF) என்ற இடத்தில் சோதனை செய்யப்பட்டு அதில் உள்ள கருவிகள் சரியாக இயங்குகிறதா என்றும் கேமிராக்கள் எடுத்தப்படங்கள் சரியாக இயங்குகிறதா என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கும் அதே சமயத்தில் ரோவர் கருவியான பிரக்யான் பல முறை வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளதாக தகல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி விசாரித்தபோது புதிய வடிவமைப்பின் மதிப்பீடு தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு பல புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி இஸ்ரோவின் தலைவர் திரு.சிவன் பேசுகையில் , இந்தத்திட்டம் முழுமையாக வெற்றியடையும் ென்றும் மேலும் தகவல்கள் சூன் முதல் வாரத்தில் தெரிவிக்கப்படும், சந்திரயான் 2 எப்படி செலுத்தப்படுகிறது என்பதை ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கும் தெரியப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்
தடைகளைத் தாண்டி சந்திரயான் 2 திட்டம் வெற்றியடைய பத்திரிக்கை.காம் வாழ்த்துகிறது
-செல்வமுரளி