புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி மறைவையடுத்து, அவர் வகித்துவந்த ராஜ்யசபா உறுப்பினர் பதவி அவரின் மனைவிக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பா.ஜ. வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்திரப்பிரதேச மாநிலத்திலிருந்து கடந்தாண்டு ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் அருண் ஜெட்லி. ஆனால், ஓராண்டிலேயே அவர் மரணமடைந்துவிட்டார். தற்போது அந்த காலியிடததிற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதவியைப் பெறுவதற்கு அக்கட்சியில் பலரும் கடும் முயற்சிகள் செய்துவரும் நிலையில், அருண்ஜெட்லியின் மனைவி சங்கீதாவிற்கு அந்தப் பதவியை வழங்கவிடலாம் என்பது மோடியின் எண்ணம் எனவும், அமித்ஷாவிற்கும் அதில் மறுப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
சங்கீதா காஷ்மீர் பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவர். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில், சங்கீதாவை அஙகே பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தலாம் என பா.ஜ. வின் அதிகார மையம் நினைப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.