சென்னை: அதிமுக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு குறித்து இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் என தெரிகிறது. அதற்காக மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக பொறுப்பாளருமான பியூஸ் கோயல் இன்று காலை சென்னை வருகை தந்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சரியாக 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. திமுக  தலைமையில் 23 கட்சிகள் கொண்ட கூட்டணி அமைக்கப்பட்டு, தொகுதி பங்கீடுகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால்,   எதிர்கட்சியான அதிமுக ஆளுங்கட்சியான திமுக கூட்டணியை வீழ்த்தும் வகையில் பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கி வருகிறது. அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியில்  40க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. . பாஜக, பாமக, அமமுக, தமாகா, புரட்சி பாரதம், ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளை இணைத்துள்ளது. அந்த கட்சிகளோடு கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

பல முறை எடப்பாடி டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார். இதற்காக கடந்த வாரம் மத்திய அமைச்சரும், பாஜக தேர்தல் பொருப்பாளருமான பியூஸ் கோயல் தமிழகம் வர இருந்தது ஆனால் பேச்சுவார்த்தை முடிவடையாத காரணத்தால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து மேலும்  கூட்டணி கட்சிகளிடையே நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தையில்,    எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, சிறிய கட்சிகளை இரட்லை இலை சின்னத்தில் போட்டியிட வைப்பதா.? அல்லது தாமரை சின்னத்தில் போட்டியிட வைப்பதா.? என பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில்,  கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில்,  பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் தமிழகம் வந்துள்ளார்.   தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள்  தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை சுதந்திரமாக நடத்துவோம் எனவும் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இன்று காலை முதல் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின் பட்டியல் வெளியாகவுள்ளது. மேலும் எந்த எந்த தொகுதிகள் என்ற பட்டியலும் வெளியாகும் என கூறப்படுகிறது. அடுத்தாக இன்னும் ஒரு சில நாட்களில் வேட்பாளர்களின் பட்டியலும், தேர்தல் அறிக்கையும் வெளியாக இருப்பதாக அதிமுக வட்டார தகவலாக உள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட உள்ள இடங்கள் –  உத்தேசபட்டியல்

அதிமுக 178 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு

பாஜகவுக்கு 27 தொகுதிகள்

பாமகவுக்கு 17 தொகுதிகள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 9 தொகுதிகள்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள்

புரட்சி பாரதம் கட்சி -2

புதிய நீதி கட்சி -2

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்-2

இந்திய ஜனநாயக கட்சி -1

இந்திய குடியரசு கட்சி -1

அகில இந்திய பார்வர்ட் பிளாக் -1

பசும்பொன் தேசிய கழகம் -1

பெருந்தலைவர் மக்கள் கட்சி-1

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் -1

சிங்க தமிழர் முன்னேற்ற கழகம் -1

தமிழ்மாநில முஸ்லீம் லீக் -1

மேலும் புதிய தமிழகம் உள்பட சில கட்சிகள் குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை.

[youtube-feed feed=1]