மதுரை:

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் வலியுறுத்தலை தொடர்ந்து, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

பின்னர்  எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேச்சே எழாத நிலையில்,  எதிர்க்கட்சிகளின் தொடர் நெருக்குதல் மற்றும் தமிழக அரசின் வற்புறுத்தல், நீதிமன்றங்களின் உத்தரவு காரணமாக, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கப்படும் என 3 ஆண்டுகள் கழித்து கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசு தெரிவித்தது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் மோடி, எடப்பபாடி,பன்வாரிலால் (பைல் படம்)

அதன்படி, ரூ.1,258 கோடியில் அனைத்து வசதிகளுடன் 750 படுக்கை வசதியுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 100 பேர் மருத்துவம் படிக்கும் வகையிலான மருத்துவக்கல்லூரி உடன் செவிலியர் கல்லூரிகளும் அமையும் என கூறப்பட்டது. இந்த மருத்துவமனை காரணமாக 3ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறப்பட்டன.

தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 27ந்தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  அப்போது பேசிய மோடி, விரைவில் கட்டுமானப்பணி தொடங்கும் என்றுடமஇ, 45 மாதங்களில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் கட்டுமானப்பணிகள் முடிக்கப்பட்டு மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும்  என்று உறுதி அளிக்கப்பட்டது.

இதனால், தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சியோடு, எய்ம்ஸ் மருத்துவமனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மருத்துவமனை கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்கும் என  எதிர்பார்த்த மக்களுக்கு ருத்துவமனை அமைப்பதற்காக மத்திய அரசு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதை மெய்ப்பிக்கும் விதமான எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள மதுரை தோப்பூரில் , இதுவரை மருத்துவமனை தொடங்குவதற்கான எந்தவொரு சிறு அறிகுறிகள் கூட தென்பட வில்லை என்று மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.  அதுபோல, மருத்துவமனை கட்டுவது தொடர்பாக, எந்தவித டெண்டர்களும் இதுவரை கோரப்படவில்லை என்று பிரபல கட்டுமான நிறுவனங்களும் தெரிவித்து உள்ளன.

இது அந்த பகுதி மக்கள் மட்டுமல்லாது தென்மாவட்ட மக்களிடைய கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு வங்கியை குறிவைத்தே மத்திய மாநில அரசுகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று பொய்யை கூறி, அதற்கு அடிக்கல் நாட்டு விழாவை யும் நடத்தி உள்ளார்கள்  என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

மக்களை ஏமாற்றி அவர்களது வாக்கு வங்கிகளை குறிவைத்தே,  பாஜகவும், அதிமுகவும் திட்டமிட்டு, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதாக மக்களை ஏமாற்றி உள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமை ஆர்வல் ஒருவர் கூறும்போது, மதுரை எய்ம்ஸ்’ மருத்துவ மனைக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக மத்தியஅரசு அறிவித்தது. ஆனால் இதுவரை எந்தவொரு பணிகளும் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து,  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில விவரங்களை கேட்டிருக்கிறேன்… அந்த விவரங்கள் கிடைக்கப் பெற்றதும், எய்ம்ஸ் மருத்துவமனையில் நிலைமை என்ன என்பது தெரியவரும் என்று கூறி உள்ளார்.