சென்னை: நாடு முழுவதும் கொரோனா அச்சம் வாட்டிவரும் நிலையில், 10ம் வகுப்புக்கு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பொதுத்தேர்வை ரத்துசெய்து, காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சியை நிர்ணயிக்க வேண்டுமென்ற ஆலோசனைகள் எழுந்துள்ளன.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாடெங்கிலும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டவுடன் மீண்டும் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அத்தேர்வு மார்ச் மாத இறுதியில் துவங்குவதாக இருந்தது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்து, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில், தேர்ச்சி வழங்கலாம் என்று பலதரப்பிலும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.