டில்லி:
ணவரை அவரது பெற்றோரிடமிருந்து பிரிப்பதற்காக தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீ்ர்ப்பளித்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 1992-ம் ஆண்டு திருமணம் நடந்தது. மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், விவாகரத்து கோரி கணவர் வழக்குத் தொடர்ந்தார். வேலைக்கார பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி மனைவி சித்திரவதை செய்கிறார். அத்துடன் வயதான பெற்றோரிடம் இருந்து பிரிந்து செல்ல வற்புறுத்துகிறார். அதற்கு ஒப்புக் கொள்ளாததால் தற்கொலைக்கும் முயன்றார். கடைசி நேரத்தில் அவரைக் காப்பாற்றினோம்.
a
தொடர்ந்து எனக்கு மன உளைச்சலையும் பயத்தையும் ஏற்படுத்தி வரும் மனைவியிடம் இருந்து விவாகரத்து அளிக்க வேண்டும் என்று கணவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
அந்த மனுவை கீழ் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, மனைவி சொன்னதுபோல் அவர்கள் வீட்டில் எந்தப் பெண்ணும் வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து கணவனுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனைவி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிபதிகள் அனில் ஆர்.தவே மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் விசாரித்து அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
“வயதான பெற்றோரைப் பிரிந்து வர வற்புறுத்தும் மனைவியை விவாகரத்து செய்ய இந்து மதத்தைப் பின்பற்றும் கணவனுக்குச் சட்டத்தில் உரிமை உள்ளது. திருமணத்துக்குப் பிறகு, மனைவியானவர் கணவனின் வீட்டில் வாழ வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வயதான நிலையில், அதுவும் வருவாய்க்கு வழி இல்லாத போது எந்த இந்து மகனும் தனது பெற்றோரைப் பிரிந்து செல்ல கூடாது. அது கலாச்சாரத்துக்கு எதிரானது. ஆண் மகனைப் பெற்றெடுத்து, வளர்த்து, கல்வி கற்றுக் கொடுத்து ஆளாக்கும் பெற்றோரை வயதான காலத்தில் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டியது மகனின் கடமையாகும்.
கணவனின் வருவாய் முழுவதையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று மனைவி நினைப்பது கொடூரமான செயல்.
வலுவான ஆதாரங்கள், காரணங்கள் இல்லாமல் கணவனை பெற்றோரை விட்டு பிரிந்து தனிக் குடித்தனம் செல்ல வலியுறுத்த முடியாது. பெற்றோரை பிரிந்து வர சொல்வது மேற்கத்திய கலாச்சாரம். நமது கலாச்சாரத்துக்கு விரோதமானது.
மேலும், தற்கொலை செய்து கொள்வதாக கணவனை மனைவி மிரட்டி இருக்கிறார். அப்படி நடந்தால் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளில் சிக்கி விடுவோம் என்ற பயத்தில் கணவன் ஒவ்வொரு நாளும் பயந்து வாழ்வது மிகுந்த மன உளைச்சலை அளிக்கும். ஆகவேவே, கீழ் நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து செல்லும்” என்று  நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.