கொல்கத்தா:

விவாகரத்து ஆன மனைவிக்கு போதிய வருமானம் இருந்தால், சிறப்பு திருமணச் சட்டத்தின்படி ஜீவனாம்சம் கோர முடியாது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கணவர் சித்ரவதை செய்வதாகக் கூறி ஒரு பெண் கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.

சிறப்பு திருமண சட்டத்தின் 36-வது பிரிவின் கீழ், மாதந்தோறும் ஜீவனாம்சம் தர கணவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
ஜீவனாம்சம் கோரிக்கையை நிராகரித்த கோர்ட், வழக்கு செலவாக ரூ.30 ஆயிரத்தை மனுதாரருக்கு வழங்க கணவருக்கு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மனைவி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.

கணவரின் வருவாயிலிருந்து ஜீவனாம்சம் பெற தனக்கு உரிமை உண்டு என்று குறிப்பிட்டிருந்தார்.
கணவரின் ஆண்டு வருமானம் ரூ.75 லட்சத்திலிருந்து, ரூ.48 ஆயிரம் ஜீவனாம்சமாக தர வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஆவணங்களை நீதிபதிகள் ஆய்வு செய்தபோது, மனுதாரரான மனைவியும் மாதம் ரூ.74 ஆயிரம் சம்பாதிப்பது தெரியவந்தது.

தனக்கு கிடைக்கும் வருவாயில் தன்னிச்சையாக மனைவியால் வாழ முடியும் என கூறிய நீதிபதிகள்,  மனுவை தள்ளுபடி செய்தனர்.

சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ், வருவாய் ஈட்டும் மனைவி, விவாகரத்துக்குப் பின் கணவரிடம் ஜீவனாம்சம் கோர முடியாது என்று தீர்ப்பளித்தனர்.