வேலூர்:
தனது கணவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட மனைவி, கணவரின் மர்ம உறுப்பை கத்தியால் வெட்டியுள்ள சம்பவம் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே லிங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெகதீசன் – சரஸ்வதி தம்பதி. காதல் திருமணம் செ்யதுகொண்ட இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் வீட்டில் இருந்து ஜெகதீசன் அலறல் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் பதறிப்போய் அங்கு சென்று பார்த்தபோது ஜெகதீசனின் மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் துடிதுடித்து கொண்டிருந்தார். அப்போது அவர், தனது மர்ம உறுப்பை மனைவி அறுத்துவிட்டு ஓடிவிட்டதாக கதறலுடன் தெரிவித்தார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஜெகதீசனை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு ர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அவர் வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து குடியாத்தம் டவுன் காவல் நிலைய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் ஆந்திர மாநிலம் வி.கோட்டா ராமகுப்பத்தில் தாய் வீட்டில் பதுங்கியிருந்த சரவஸ்வதியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணை நடத்தியபோது சரஸ்வதி தெரிவித்தாவது:
“கடந்த வருடம் என் கணவர் ஜெகதீசனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக என் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டிற்கு வந்தேன். அப்போது கணவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலையில் இருவரும் நெருக்கமாக இருந்த போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியால் அவரது மர்ம உறுப்பை அறுத்துவிட்டு ஓடிவிட்டேன்” என்று தெரிவித்தார்.
கணவரின் மர்ம உறுப்பை மனைவு வெட்டிய சம்பவம் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.