ஜெனிவா: தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கெரோனா வைரஸ் தீவிரமாக பரவினாலும், வயதுவந்த நபர்கள் அனைவரும் ஆஸ்ட்ராஸெனா தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்கிறது உலக சுகாதார நிறுவனம்(WHO).

இந்த தடுப்பு மருந்து, குறைவான தாக்கத்தையே கொண்டுள்ளது என்று, இதன் பயன்பாட்டை தென்னாப்பிரிக்க அரசு ஏற்கனவே நிறுத்தியிருந்தும்கூட, இந்தப் பரிந்துரையை மேற்கொண்டுள்ளது WHO.

தற்போது, ஆஸ்ட்ராஸெனகா தடுப்பு மருந்திற்கு பதிலாக, ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பு மருந்தை பயன்படுத்துவது குறித்து தென்னாப்பிரிக்கா ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

65 வயதிற்கு மேலுள்ள நபர்களுக்கு, கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு பல ஐரோப்பிய நாடுகள் தடைவிதித்துள்ள நிலையிலும், உலக சுகாதார நிறுவனம் இந்தப் பரிந்துரையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.