சென்னை:
கல்லூரி மாணவிகளை தகாத முறையில் வழிநடத்திய ஆடியோ வெளியான வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தான் நிர்மலா தேவியை பார்த்தது கிடையாது என்று தெரிவித்தார். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்,‘‘ கவர்னர் அண்மையில் மதுரைக்கு வந்த சமயத்தில் பல்கலைக்கழக கெஸ்ட் ஹவுஸில் நிர்மலா தேவிக்கு தனியாக சூட் ரூம் ஒதுக்கியது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel