நெட்டிசன்:

மதுரை எம்.சரவணக்குமார்  (வாட்ஸ்அப் பதிவு)

சூரிய நமஸ்காரத்தால் நமக்கு ஏற்படும் பலன் என்ன என்பது குறித்து, சூரிய நமஸ்காரத்தின் போது உச்ச‍ரிக்கப்படும் 12 மந்திரங்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

நாம் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய அரிய தகவல் இது.

சூரியனை கடவுளாக எண்ணி வணங்கும் பழக்கம் பழங்கால தொட்டே  இருந்து வருகிறது. சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிய நோய் தீர்க்கும் யோக பயிற்சியாகும்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்ற பழமொழி உண்டு. சூரிய நமஸ்காரத்திற்கும் கண்ணிற்கும் உள்ள நெருக்கமான தொடர்பை இதுகாட்டுகிறது. கண்ணொளி வழங்கும் சூரியனின் சக்தி உடலில் ஏற்படும் நோய்களை நீக்கி உடல் ஆரோக்கி யத்தையும் பாதுகாக்கிறது.

அதிகாலைநேரத்தில் நம் உடலில் படும் சூரிய ஒளி தேக ஆரோக்கியத்திற்கு முக் கிய பங்கு வகிக்கிறது. இதைத்தான் நமது பாரத பூமியில் வாழ்ந்த சித்தர்கள் காலை வெயிலில் ஆரம்பிக்கும் பித்தம், மாலை வெயிலில் தணிந்து போகும் என்றனர்.

சூரிய ஒளியைக் கொண்டு கொடிய நோயான காமாலையையும் குணப்படுத்தலாம் என்கிறது அதர்வண வேதம்.

இதனை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதுதான் சன்பாத் எனப்படும் சூரிய ஒளிக் குளியல். சூரியக் குளிய லால் சிறுவர்களின் மன ஆற்றல் பத்து முதல் இருபது சதவீதம் வரை அதிகரி த்துள்ளதாக மேலை நாட்டு நவீன மருத்துவ ஆய்வு நிரூபித்துள்ளது. அதைத்தான் வெளிநாட்டவர் கடைபிடித்து வருகிறார்கள்.

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு மிகவும் உகந்த நேரம் சூரிய உதயமாகும் அதிகாலை நேரம்.

இளஞ் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. இரவில் தூக்கத்தால் உட லுக்கும், மனத்திற்கும் ஓய்வு கிடைப்பதா ல், அதிகாலையில் உடற்தசைகள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

மூளையின் அலைகள், அதிர்வுகள் குறைந்து அமைதியாக இருப்பதும் அதிகாலையில்தான். அதிகாலையில் வெப்பம் குறைவாக இருப்பதால் சூரிய நமஸ்கார பயிற்சி யின் போது நமது உடலும் உள்ளமும் சோர்வடைவதில்லை. சூரிய நமஸ்காரம் செய்வதற்கு உகந்த திசை கிழக்கு. சூரியனின் கதிர்கள் உடல் முழுவதும் படும்வகையில் சுத்தமான காற்று இருக்கக் கூடிய திறந்த வெளியில் நின்றபடி செய்ய வேண்டும்.

12 மந்திரங்களை சொல்லி சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நம் உடல் நோய்கள் யாவும் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

ஓம் மித்ராய நமஹ ( சிறந்த நண்பன்)

ஓம் ரவயே நமஹ  (போற்றுதலுக்குரியவன்)

ஓம் சூர்யாய நமஹ ( ஊக்கம் அளிப்பவன்)

ஓம் பானவே நமஹ  (அழகூட்டுபவன்)

ஓம் ககாய நமஹ  (உணர்வுகளுக்கு வலிமை தருபவன்)

ஓம் பூஷ்ணே நமஹ (புத்துணர்ச்சி தருபவன்)

ஓம் ஹிரண்யகர்ப்பாய  நமஹ  (ஆற்றல் அளிப்பவன்)

ஓம் மரீசயே நமஹ ( நோய்களை அழிப்பவன்)

ஓம் ஆதித்யாய நமஹ ( கவர்ந்திழு ப்பவன்)

ஓம் சவித்ரே  நமஹ  (சிருஷ்டிப்பவன்)

ஓம் அர்க்காய நமஹ  (வணக்கத் திற்கு உரியவன்)

ஓம் பாஸ்கராய நமஹ ( ஒளிமிகுந் து பிரகாசிப்பவன்)

மேற்கண்ட மந்திரத்தை உச்சரித்தவாறு சூரிய நமஸ்காரம் செய்யும் போது நமது மனம் சிதறாமல் ஒருமுகப்படுகிறது.

மந்திரத்தை உச்சரிக்கும்போது அதனதிர்வு நமது உடலின் எல்லா பகுதிகளுக்கும் சென்று பல உணர்வுகளை ஏற் படுத்தும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மையாகும்.

நாம் ஒவ்வொருவரும் தினசரி சூரிய நமஸ்காரம் செய்து ஆரோக்கியமான வாழ்வை  பெறுவோம்.