சென்னை,
தமிழக கவர்னராக அறிவிக்கப்பட்ட பன்வாரிலால் நேற்று பிற்பகல் சென்னை வந்தடைந்தார். இன்று காலை 9.30 மணிக்கு அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமைநீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கவர்னரின் பதவி ஏற்பு விழாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அதையேற்று அவரும் பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
ஆனால், அவர் கவர்னருக்கு வாழ்த்து சொல்ல அதிகாரிகள் தடுத்ததாக புகார் கூறினார்.
கவர்னரின் பதவி ஏற்பு விழா முடிந்ததும் தமிழக முதல்வர், துணை முதல்வர் கவர்னருக்கு பொன்னாடை போர்த்தியும், மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வந்தனர். அதையடுத்து எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் வாழ்த்து சொல்ல அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், முதல்வர், துணை முதல்வருக்கு அடுத்தபடியாக அமைச்சர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து ஸ்டாலின், கவர்னருக்கு வாழ்த்து சொல்ல அனுமதிக்கப்பட வேண்டும் மேடையில் இருந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அமைச்சர்கள் வாழ்த்து சொல்ல வரிசையாக நின்றிருந்ததால், ஸ்டாலினை அதிகாரிகள் அனுமதிக்காமல் காக்க வைக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து, மேடையருகே சென்ற ஸ்டாலின், கவர்னரை சந்தித்து வாழ்த்து சொல்ல எப்போது அனுமதி கிடைக்கும் என அங்கிருந்த கவர்னர் மாளிகை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து அதிகாரிகள் ஸ்டாலினை கவர்னடரிம் அழைத்து சென்றனர். அங்கு அவர் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து சொன்னார்.
இந்த காலதாமத பிரச்சினையால் நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சியில் மரபு மீறல் நடந்துள்ளது.
கவர்னருக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்த பிறகு, எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து தெரிவிப்பது தான் மரபு. கவர்னருக்கு வாழ்த்து தெரிவிக்க முயன்ற போது அதிகாரிகள் என்னை தடுத்து இடையூறு செய்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.