சென்னை:

பொதுவாக ஆண்டுதோறும் நடைபெறும் மறைந்த பத்திரிகை ஆசிரியர்  சோ.வின் துக்ளக்  ஆண்டுவிழாவில் நடிகர் ரஜினி கலந்துகொள்வது வழக்கம்.

ஆனால், சோ மறைவுக்கு பிறகு, ஆடிட்டர் குருமூர்த்தி ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவில்லை. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீப காலமாக தமிழக அரசியல்வாதிகள் குறித்து குருமூர்த்தி சர்ச்சை கருத்துகளை தெரிவித்துள்ள நிலையிலும், ரஜினியின் ஆன்மிக அரசியல் அறிவிப்பு காரணமாகவும், துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி பங்கேற்காதது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற .’துக்ளக்’ பத்திரிகையின், 48வது ஆண்டு விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியான, கேள்வி -பதில் நிகழ்ச்சியில் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் ரஜினி

அதற்கு பதில் அளித்து பேசிய  குருமூர்த்தி,  ”ரஜினி வேண்டுமென்று நிகழ்ச்சியை தவிர்க்கவில்லை என்றார். மேலும்,  தற்போது  மலேசியாவில் இருக்கும் ரஜினி, அங்கிருந்து  ஹாங்காங் செல்ல உள்ளதால், நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என, அவர் தன்னிடம் போனில் பேசியதாக வும் தெரிவித்தார்.

மேலும், விழாவில் குருமூர்த்தி பேசும்போது,  ரஜினி மனதில் அரசியல் வித்திட்டவர் சோ தான் என்றார்.  தமிழக அரசியலில் ரஜினிக்கு சிறந்த வாய்ப்பு இருப்பதாகவும், அவர்  கழகங்களுடன் கூட்டணி வைக்காமல், அவர் வகுத்த  வியூகம் தான் ஆன்மிக அரசியல் என்ற்ர்.

ரஜினியும், பா.ஜ.,வும் கூட்டணி அமைத்தால், தமிழக அரசியல் தலையெழுத்து மாறும். தி.மு.க.,- அ.தி.மு.க.,வால் தமிழகத்தில் இனி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் கூறினார்.