சென்னை:
சர்ச்சைக்குரிய தொழிலதிபர் சேகர் ரெட்டியின் நண்பரான ஓ.பி.எஸ். மீது வருமானவரித்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்திடம், “சர்ச்சைக்குரிய தொழிலதிபர் சேகர் ரெட்டியின் டைரியில் அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், அந்த அமைச்சர்கள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டுமென வருமானவரித்துறை, தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதே” என்று கேட்கப்பட்டது.
அதற்கு சி.வி. சண்முகம், “சேகர் ரெட்டி டைரியில் பெயர்கள் குறிப்பிட்டுள்ளதாக கூறுகிறார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் சேகர் ரெட்டியுடன் சேர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். இருக்கும் புகைப்படம் வெளியாகி பல மாதங்கள் ஆகின்றனவே. இருவரும் நம்பியார் – அசோகன் போல புன்னகை புரிந்து போஸ் கொடுக்கிறார்களே. ஆனால் ஓ.பி.எஸ் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே.. ஏன்” என்ற கேள்வியை எழுப்பினார்.