ந்தியாவில் சீன நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்துவரும் நிலையில் இன்று கூட டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனத்தின் எம்எக்ஸ் வீடியோ பிளேயரில்  Paytm மற்றும் சீனாவில் Tencent நிறுவனங்கள்  $125 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.

ஆனால் ஏன் பிரபலமாகிவரும் செயலிகள் ஏதும் இந்தியாவில் இருந்து அதிகமாக வரவில்லை?

உதாரணத்திற்கு சீனாவின் டிக்டாக் செயலியானது செப்டம்பர் 2018ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்டது, ஆரம்பித்த இன்று 200 மில்லியன் ( 20 கோடி இந்திய பயனாளர்களை பெற்று உள்ளது., மாதந்தோறும் 12 கோடி பேர் இச்செயலியில் தொடர்ச்சியாக பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றனர்.அதேபோல் டிக்டாக் நடத்தும் அதே நிறுவனத்தின்    Helo and Vigo செயலிகள்  2 முதல் 3 கோடி பயனாளர்களை பெற்றுள்ள. உலகம் முழுதும் 100 கோடி  பேரை பயனாளராக பெற்றுள்ளது.

இதே போன்ற செயலி இந்தியாவின் பெங்களூரில் இருந்து ஷேர்சாட் 4 கோடி பயனாளர்களுடன் செயல்பட்டுவருகிறது. ஏன் இந்திய நிறுவனங்களால் இந்தியாவிலேயே வெற்றி பெற முடிய வில்லை என்றால் பெரிய முதலீடு தேவை என்பதுதான்,

டிக்டாக், ஹெலோ, விகோ போன்ற நிறுவனங்கள் சீனாவி் பைட் டான்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் செயல்படுகின்றன. பைட் டான்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 72 பில்லியன் அமெரிக்க டாலர்கள்,  அவர்களால் துணிந்து விளம்பரம் செய்ய முடியும். ஆனால் இந்தியாவில் இயங்குள் தொழில்முனைவோர் எடுத்தவுடனே வருமானம் இல்லாமல் எப்படி செயல்படுவது என்பதிலயே கவனத்தினை செலுத்துகிறார்கள்.

இதற்கான காரணத்தினை பற்றி தமிழகத்தின் உள்ள பிரபல தொழில்முனைவோரான திரு.ஏ.ஜே.பாலசுப்பிரமணியம்,  அவர்களிடம் கேட்டபோது (https://www.facebook.com/ajbala )

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம்

1.சீனாவில் உள்ளூர்தொழில் முனைவோர்களை அரசு சிறப்பாக ஊக்குவிக்கிறது

2. சீனாவில் நிறுவன முதலீட்டு லாபத்திற்கு மிக எளிய வரிவிதிப்பு முறை இருக்கிறது.

உதாரணத்திற்கு முதலீட்டாளர்கள் வெளியேறும்போது மட்டுமே அவர்களின்  முதலீட்டு மீதான லாபத்திற்கு  வரியை கணக்கிடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் முதலீடு செய்யும்போது முதலீட்டிற்கே வரிவிதிப்பு செய்யப்படுகிறது என்ற வகையில்  மற்ற நாடுகளை விட இந்தியா கொஞ்சம் வித்தியாசமாகத்தான் நடந்துகொள்கிறது.

இந்தியா தனது வரிச் சட்டங்களையும் நிறுவனச் சட்டங்களை வளர்ந்த நிறுவனத்திற்கும், புதிய தொழில்முனைவு நிறுவனத்திற்கும் ஒரே வரி விதிப்புமுறைதான்  இருக்கிறது, இது ஒரு நியாய மாக தெரிந்தாலும்  புதிய தொழில்முனைவோர்களின் தொழிலில் முதலீடு செய்யும்போது ஒரு தயக்கம் இருக்கும் , அதனால் துணிந்து முதலீடு செய்து வெற்றி பெற முடியுமா என்று தயக்கம் ஏற்படுகிறது

3. பெரும்பாலான மென்பொருள்கள், ஆங்கில மொழியை முதன்மையாக கொண்டு  செயல்படு கி்றது. இந்தியாவில் ஆங்கில மொழி புலமை அதிகம் இருப்பது மட்டுமல்ல இந்தியர்களின் இயல்பான கற்றுக்கொள்ளும் திறனால்  இந்தியர்கள் ஆங்கிலத்தினை எளிதில் புரிந்து கொள்கின்ற னர். இதனால் எல்லா நிறுவனங்களும் இந்தியாவிற்கு என்று தனியாக மென்பொருள்களை உருவாக்குவதில்லை,  ஆனால் சீனாவில் அப்படியில்ல முதலில்  சீனா மொழி, அமெரிக்க சந்தை ஆங்கில மொழி என்று இரண்டிலும் உருவாக்குகின்றனர்.

ஆனால் உலக அளவில் புதிதாக உருவாக்கப்படும் எல்லா செயலிகளும், ஆங்கிலத்தில் இருப்ப தால் இந்தியா, சிங்கப்பூர், ஆஸ்திரெலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இயல்பாகவே  சந்தைக்குள் நுழைந்துவிடுகின்றன

(4)  தொழில்நுட்ப மென்பொருள்களிலும், தொழில்நுட்ப வன்பொருள்களிலும்  அமெரிக்கர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.  வளர்ச்சி மற்றும் சந்தைப்படுத்துதல் மற்றும் அளவீடு என வரும்போது நாம் அமெரிக்கர்களைப் போலவே  இருந்தாலும் அவர்களின் நிறுவனங்கள் குறிப்பிட்ட சதம் எல்லாமே மறைமுக விற்பனை வரவில்தான் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன.

அதாவது பேஸ்புக், கூகிள் நிறுவனம் எல்லாமே விளம்பரம் மூலம் வரும் வருவாயில்தான் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன. ஆனால்  இந்தியாவில் குறிப்பாக  b2b வர்த்தக முறையில் சென்னையில் உள்ள   SaaS நிறுவனங்கள்  வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன,  சென்னையில் உள்ள SaaS நிறுவனங்களின் வருமானம்  நேரடியாக மாதாந்திர சந்தா என்ற முறையில் செயல்பட்டு  வெற்றியடைந்துள்ளன , ஆனால் மறை முக வருவாய் உள்ள நிறுவனங்கள் தங்கள் சந்தை படுத்துதலை கைவிட்டால் அவர்கள் வீழ்ச்சியை  நோக்கி பயனிப்பார்கள், ஆனால் நேரடி வருவாய் என்பது அப்படி எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது  என்பதையும் நாம் உற்று பார்க்கவேண்டும் என்றார்

முரளி தலாசிலா , innovation and startups இன் தலைவர் ‛‛ வியாபாரம் 2 வாடிக்கையாளர்கள் ’ என்பது மிக அதிகமாக பணம் தேவைப்படும் இடம், அதனால்தான் இந்த துறை சார்ந்த நிறுவன முதலீட்டா ளர்களை எதிர்பார்க்கின்றனர். முதலீட்டுத்துறையை பொருத்தவரை இன்னமும் பழமையிலயே மிதக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் தொழில்துறையில் ஆபத்தில்லா வருமானத்தினை பெரிதும் விரும்புகிறார்கள் , இந்நிலை மாறவேண்டும் என்றார்

ScripBox நிறுவனத்தின் முதன்மை தலைமை செயல்அதிகாரி அசோக்குமார்,  இந்தியாவில் தொழில் எண்ணங்களுக்கு எப்போதும் பஞ்சமில்லை, நமக்கு பிரதானம் முதலீடுதான், அதற்குத்தான் நமக்கு அதிக அளவில் முதலீட்டாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்றார்

திரு.வெங்கட்ரங்கன் திருமலை, சிஇஓ (லிட்டில் பிட் சர்வீசஸ்),  மைக்ரோசாப்ட் பிராந்திய மேலாளர் (honorarium)

https://www.facebook.com/venkatarangan

இந்தியாவில்  தொழில்முனைவு நிறுவனங்களுக்கான முதலீடு இருக்கிறது, ஆனால்  குறைந்த கால அடிப்படையில் முதலீடு இருக்கிறது நமக்குத் தேவை நீண்டகால அடிப்படையில் மூலதனம். எனவே இதை மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டும்.

தொழில்நுட்ப முனைவு எல்லாமே பி2பி(வியாபரம் டூ வியாபாரம்) நிறுவனங்கள் இருக்கிறது.  நமக்குத் தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ளவர்கள் இணைந்து தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தேவையானவற்றை உருவாக்குகிறார்கள்,  ஆனால் உண்மையில் தேவை,B2C எனப்படும் வியாபாரம் 2 வாடிக்கையாளர் என்ற துறையில்தான் இருக்கிறது

நம்முடைய மென்பொருள், குறுஞ்செயலி போன்றவற்றினை உருவாக்கிட நம்மிடையே உள்ள தயாரிப்பு மேலாளர்களுக்கு B2B முறையில்தான் அதிக அனுபவம் இருக்கிறது, ஆனால் பிடூசி எனப்படும் வியாபாரம் டூ வாடிக்கையாளர் என்ற துறையில் நம்மிடம் உள்ள தயாரிப்பு மேலாளர்கள் இல்லை, அதே சமயம் இப்போது இருப்பவர்களுக்கும் அனுபவம் குறைவு,  சிறிய உதாரணம் நிறுவனங்களுக்கான மென்பொருள், குறுஞ்செயலி விசயமாக 1000 இந்திய தலைமை செயல் அதிகாரியை நம்மால் எப்படியும் சந்தித்துவிட முடியும். ஆனால் ஒரு 10 லட்சம் பேரை சென்றடைய வேண்டுமெனில் நம்மால் செய்யமுடியுமா? எனவே B2C துறையில் நாம் மிகுந்த அனுபவத்தினை பெறவேண்டும்

எனவே புதியதாக தயாரிப்பு மேலாளர் என்ற வேலையை உருவாக்கப்படவேண்டும், அவ்வாறு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் இன்னமும் பல பேருக்கு பயிற்சி அளிக்கும்போது நமக்கு மிகச்சிறந்த தயாரிப்பு மேலாளர் ( B2C) துறைக்கு கிடைப்பார்

சந்தைப்படுத்துதல்

ஓரு வாடிக்கையாளரை பெற 2-3 டாலர் ஒரு செயலிக்கு அல்லது மென்பொருள்களுக்கு  செலவாகிறது, அப்படியெனில் 10 லட்சம் பேரை சென்றடைய தேவைப்படும் 20 லட்சம் டாலர் முதலீடு  தேவை, 1 மில்லியன் பேரை சென்றடைய தேவைப்படும் 3 மில்லியன் டாலர் தொகையை நாம் எப்படி திரட்டிட முடியும்.

பிராண்டிங் 

இந்தியாவில் பிரமாதமான பொருட்கள் எல்லாம் இருந்தாலும் அவர்கள் கோட்டை விடுவது சந்தைப்படுத்துவதிலும், பிராண்டிங்கிலும்தான், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் கேட்டால் அதன் பெயர் எல்லாருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் வாங்கும் ஆட்கள் மிகக்குறைவு. இந்தியாவில் டாடா நிறுவனத்திற்கு அடுத்து இருக்கும் நிறுவனங்களின் பெயர் நமக்குத் தெரியுமா என்றால் கிடையாது

ஆனால் நம்மிடையே வெளிநாட்டு தயாரிப்புகள் எப்படி வந்து சேர்க்கின்றன, ஹெலோ, வாட்ஸ்அப், பேஸ்புக் எல்லாமே தங்களின் பிராண்டிங் விளம்பரப்படுத்துவதால் மக்களிடையே சென்று சேருகின்றன. இந்தியர்கள் பிராண்டிங்கை கவனமாக கற்றறிந்தால் நமக்கும் பிரபலமான சந்தை காத்திருக்கிறது

இந்த விசயத்தில் அமெரிக்கா சிறந்து விளங்குகிறது, உலகமெங்கும் தங்கள் சேவைகளை இலவசமாக கொடுத்து வாடிக்கையாளர்களை பெறுகின்றன,. இப்போது சீனா  அமெரிக்காவை பார்த்து கற்றுக்கொண்டு வருகிறது. அதனால்தான் நம்மிடையே ரெட் மீ பிரபலமாகியிருக்கிறது

இந்திய மக்களின் எண்ணம்

இங்கே நிச்சயமாக மக்கள் கொஞ்சமாவது தங்கள் மனநிலையை மாற்றிடவேண்டும். சமீபத்தில் சிங்கப்பூர் சென்றபோது டைகர் பாம் வாங்கி வாங்க என்றார்கள், நானும் வாங்கிக்கொடுத்தேன், ஆனால் அதில் மேட் இன் இந்தியா என்று இருக்கிறது. என்னதான் இந்தியாவில் உற்பத்தி செய்தாலும் வெ ளிநாட்டில் இருந்து வந்தால்தான் சிறப்பு என்ற எண்ணம் நம் மக்களிடையே இருக்கிறது. அது மாற்றப்படவேண்டும்.

உள்ளூர் விலை போகாதது எப்படி வெளியூரில் விலை போகும் ? என்ற எண்ணம் நம் மக்களிடையே வேண்டும்

சீன பொருட்கள் இந்தியாவில் தான் அதிகம், ஏன் சீனா திடீரென இந்தியாவில் அதிக முதலீடு செய்கிறது என்றால் சீனாவிற்கு வெ ளியே அதிக மக்கள் தொகையுள்ள நாடு இந்தியாதான், எனவே தம் பொருட்களை இந்தியாவில் எல்லாரிடமும் கொண்டு சேர்க்க அவர்கள் அவர்களின் பிராண்டிங்கை சந்தைப்படுத்துகிறார்கள். ஆனால் நாம் அதை செய்வதில்லை, இந்த விசயத்தில் நாம் சீனாவை விட 10-20 வருடம் பின்தங்கியிருக்கிறோம்

எனவே இந்தியாவில் உளள தொழில் முனைவோர்களுக்கு  நீண்டகால முதலீடு தேவை, வியாபாரம் 2 வாடிக்கையார்கள் (B2C) துறையில் வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்பதை கண்டறிந்து செயல்படுத்தும் சிறந்த தயாரிப்பு மேலாளர்கள் தேவை, பிராண்டிங் மிக முக்கியத் தேவை. இவையெல்லாம் இருந்தால் நிச்சயம் நாம் உலகஅளவில் வெற்றியடையலாம்

-செல்வமுரளி