ஐதராபாத்: இந்திய டெஸ்ட் அணியில் ரோகித் ஷர்மாவுக்கு இடம் அளிக்கப்படாததை முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் விமர்சித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “ஹனுமன் விஹாரிக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்தாகிவிட்டது. ரோகித் ஷர்மா போன்ற ஒரு பெரிய வீரரை அணியில் தேர்வுசெய்தால், அவரை 11 பேரில் ஒருவராக ஆட வைக்க வேண்டும்.

ரோகித் ஷர்மாவின் டெஸ்ட் ரெக்கார்டு ஒன்றும் மோசமில்லை. அந்தப் புள்ளி விபரங்களை மற்றவர்களும் சரிபார்த்துக் கொள்ளலாம். ரோகித் ஷர்மா, டெஸ்ட் போட்டிகளில் நீண்டகாலம் வாய்ப்புப் பெற தகுதியானவர்.

ரோகித் ஷர்மா துவக்க வீரராகவும் ஆடலாம். ராகுல் சரியாக ஆடவில்லை என்றுதான் ஆஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். அவர் தொடர்ந்து ரன் குவிப்பதில்லை. எனவே, ராகுலின் இடத்தில் ரோகித் இடம்பெறலாம். ரோகித் போன்ற ஒரு வீரருக்கு முறையான மரியாதை கொடுக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார் அசாருதீன்.

முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் இடம்பெறாத நிலையில், இரண்டாவது டெஸ்ட்டில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரஹானே மற்றும் அனுமன் விஹாரி போன்றோர் அணியில் தேர்வுசெய்யப்பட்டதால், ரோகித் தனது இடத்தை இழந்தார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை அணியில் தேர்வு செய்யாததற்கு முன்னாள் டெஸ்ட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]