‘பத்திரிகைகளை வீடுகளில் விநியோகிக்கத்  தடை..    என்ன லாஜிக் தாக்கரே?

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிர மாநிலம்,அதனை விரட்ட அனைத்து மார்க்கங்களையும் கையாண்டு வருகிறது.

அதில் ஒன்று –

பத்திரிகைகளை வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்யக்கூடாது என்பது.

இந்த விவகாரத்தைப் பாம்பே உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை , தானாக முன் வந்து விசாரணை மேற்கொண்டது.

‘லாக்டவுனில்’ இருந்து பத்திரிகைகளுக்கு மாநில முதல் –அமைச்சர்( தாக்கரே) விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி, பி.பி.வாரலே, மாநில அரசுக்கு சில கேள்விகளை எழுப்பி, இதற்கெல்லாம் வரும் 17 ஆம் தேதி பதில் அளிக்குமாறு ஆணை பிறப்பித்துள்ளார்.

‘’பத்திரிகைகளை அச்சிட்டு, அதனைக் கடைகளில் விற்பனை  செய்ய அனுமதிக்கும் போது,  வீடுகளில் நேரடியாக விநியோகிக்க ( டோர் டு டோர் டெலிவரி) தடை விதிப்பது என்ன லாஜிக்?’’ என்று அந்த மாநில முதல்-அமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது, மும்பை உயர்நீதிமன்றம்.

’’கடையில் போய் பத்திரிகை வாங்கப் போகிறேன் என்று ஒருவர் நொண்டி சாக்கு சொல்லி தெருவுக்கு வர இது வழி வகுக்காதா?’’ என்றும் நீதிமன்றம் வினா எழுப்பி உள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்