அலிகார்:
உ.பி. மாநில அலிகார் பகுதியை சேர்ந்த முன்னாள் மேயர் சகுந்தலா பார்தி, மாட்டிறைச்சி சம்பவம் தொடர்பாக காவல்துறையினரை மீரட்டிய சம்பவம் வைரலானது. அதில், ரம்ஜான் மாதத்தின்போது, இஸ்லாமியர்கள் ஏன் மாடு இறைச்சி ஏன் உண்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று டெல்லி கேட் பகுதியில், அலிகார் நகரில் டிரக் ஒன்றில் மாட்டிறைச்சி கடத்தி கொண்டு வரப்பட்டது பசு பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதுபோல, சகுந்தலா பார்தியும் சம்பவ இத்துக்கு வந்தார்.
விசாரணையில் மாட்டிறைச்சியை கொண்டு சென்றவர் பெயர் கரீம் என்று கூறப்படுகிறது. இறைச்சியை எடுத்து வந்தவர்கள் அதற்கான பில்கள் மற்றும் உறுதி சீட்டுகளை வைத்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மாட்டிறைச்சி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து தெரிவித்த அலிகார் வட்டார அதிபாரி, சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவும், கைப்பற்றப்பட்ட இறைச்சி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் மேயர் சகுந்தலா பார்தி, மாட்டிறைச்சி கையாளுவதையோ அல்லது ஏற்றிச் செல்வதையோ பொதுமக்கள் சட்டத்திற்குள் கொண்டு வருவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும் இதுகுறித்து காவல்நிலையத்திற்கு சென்றவர், அங்குள்ள காவல்துறை அதிகாரிகளிடம், இது, சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி அல்ல இது இப்போது பா.ஜ.க ஆட்சிதான் என்று மிரட்டிய நிலையில், ரம்ஜானில் இறைச்சி ஏன் உண்ணப்படுகிறது என்பதையும் அவர் கேள்வி எழுப்பினார்.
அவரது பேச்சு குறித்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது, தான்அப்படி கூறவில்லை என்று பல்டியடித்துள்ளார். “ரம்ஜானின் போது இறைச்சியைக் கொண்டிருப்பதைப் பற்றி நான் ஒருபோதும் கருத்துக் கூறவில்லை. இந்துக்கள் உண்ணாவிரதத்தில் இறைச்சியை சாப்பிடுவதில்லை என்று நான் சொன்னேன் “என்று அவர் கூறி உள்ளார்.