றுதி ஊர்வலங்களில் கமல் கலந்துகொள்வதில்லை என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கமல் ஏன் அப்படிக் கூறினார் என்று தஞ்சை மாவட்ட கமல் நற்பணி மன்றம் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் சரவணன் சார்பில் ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது.

“இறுதி மரியாதையும் இறுதி ஊர்வலமும்” என்ற தலைப்பிலான அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

”இறுதி ஊர்வலங்களில் கமல் கலந்து கொள்வதில்லை என்பது குறித்து பல அறிவுஜீவிகளும், அறிவுஜீவிகளாய் அலட்டிக்கொள்பவர்களும் தொடர்ந்து பல்வேறு வகையில் கருத்துக்கள் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஏன் கலாமின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு இறுதி மரியாதை செய்வேன் ஆனால் இறுதி ஊர்வலங்களில் எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லியிருக்கிறார். இறுதி ஊர்வலங்களில் கலந்து கொள்வது தனக்கு ஏன் ஒவ்வாமல் இருக்கிறது என்பது குறித்து விளக்கங்கள் கொடுத்து முடிந்தாலும் விமர்சனங்கள் ஓய்ந்த பாடில்லை என்பதால் இறுதியாக ஒரு விளக்கம்.

தனது நற்பணி மன்றங்களின் மூலம் பல வருடங்களாக பல சமூக நலப்பணிகளை கமல் முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார். அந்த சமூக நலப்பணிகளின் முக முக்கியமானதாக இதுவரை வேறு எந்த பிரபலமும் செய்திடாத வகையில் கமலும் அவரது நற்பணி இயக்கமும் செய்து வருவது. உடல் தானம். ஒருவர் இறந்த பின் தனது உடலை தானமாக கொடுப்பது என்பது இருக்கின்ற தானங்களிலே ஆகப்பெரிய தானம் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை.

அத்தகைய உடல் தானம் கொடுப்பதில் பல்வேறு மத நம்பிக்கைகள்,குடும்ப நம்பிக்கைகள் என பல நம்பிக்கைகளை தியாகம் செய்து பலர் தங்களது உடலை இறந்த பின் தானமாக கொடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உடல் தானத்தை முன்னெடுத்து செய்து கொண்டிருக்கும் கமல் ஹாசனுக்கு, இறந்த பின் அந்த உடலை எரிப்பதற்க்கோ புதைப்பதற்கோ எடுத்துச்செல்லும் அந்த இறுதி ஊர்வலச்சடங்கு ஒரு முக்கியமற்ற நிகழ்வாக தோன்றியுள்ளது.

இறந்த பின் கூட அந்த உடல் எவ்வித பயனுமற்று யாருக்கும் உபயோமற்று இருக்கப்போவது இறப்பிற்கு பின்னர் உடலை தானமாக கொடுக்க வலியுறுத்தும் ஒரு மனிதனுக்கு கண்டிப்பாக உறுத்தத்தான் செய்யும். அதனால் அவர் இறுதி ஊர்வலங்களில் கலந்து கொள்வதில்லை. அதே நேரத்தில், இறுதி மரியாதை என்பது ஒரு சக மனிதனுக்கு செய்யப்படும் மரியாதை என்பதால் அதை கண்டிப்பாக நிறைவேற்றவேண்டிய கட்டாயம் இருக்கும்.

இவ்விரண்டு நிகழ்வையும் மனிதாபிமான அடிப்படையில் அளந்து பார்த்தால் நமக்கு கமல்ஹாசனின் நியாயங்கள் தெரியும் புரியும். மிக மேலோட்டமாக இறுதி மரியாதையையும் இறுதி ஊர்வலத்தையும் ஒரே தராசில் வைத்துப்பார்த்து, விமர்சனம் மட்டுமே செய்ய வேண்டுமே என்ற குறிக்கோளுடன் பார்த்தால் நமது புரிதலில் தான் குறைபாடுண்டே தவிர கமலின் எண்ணத்தில் அல்ல என்பதை அறியும்.

இறந்த பின் உடல் தானம் செய்வோம். இறந்தும் இருப்போம்!” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.